சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “கூலி” படம், முதல் நாள் முதல் காட்சி (FDFS) என்றவுடன் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வெறித்தனத்தை பிரத்யேகமாக சாட்சி சொல்லியது பெங்களூருவின் ஸ்வாகத் சங்கர் நாக் சிங்கிள் ஸ்க்ரீன்.
இந்த திரையரங்கில், காலை 6.30 மணிக்கான சிறப்பு FDFS டிக்கெட் களின் விற்பனை நடைபெற்றது. டிக்கெட் விலைகள் சாதாரணம் அல்ல ₹1000, ₹1500, ₹2000 என்ற மூன்று பிரிவுகளில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது கர்நாடக அரசின் ₹200 விலை வரம்பை மீறியது.
அதிக விலை இருந்தபோதும் ஒரு நிமிடம் கூட தாமதமின்றி அனைத்து டிக்கெட்டுகளும் ஹவுஸ்ஃபுல் ஆனது. இது பணத்தை விட ரஜினியின் மேல் ரசிகர்களுக்கு இருக்கும் அன்பையும் படத்தின் மீது இருக்கும் ஆர்வத்தையும் அறியலாம்.
இந்த ஒரு காட்சியிலிருந்தே ₹7.35 லட்சம் வருவாய் கிடைத்தது. ஒரு சிங்கிள் ஸ்க்ரீனில் இப்படியான வருமானம் அரிதாகவே பார்க்க முடியும் அது கூட ஒரு அதிகாலை காட்சியில் என்பதில் தான் பெரிய சாதனை என்று கூறலாம்.
பெங்களூர் மட்டுமின்றி உலகம் முழுவதும் கூலி படத்திற்கு இதே மாதிரி பிரீமியர் புக்கிங் நடந்தன. ஆனால் ஸ்வாகத் சங்கர்நாக் திரையரங்கின் காலை 6.30 காட்சி பிரீமியர் புக்கிங் ரசிகர்கள் உற்சாகத்தால் சிறப்பு பெற்றது.
மொத்தத்தில் கூலி FDFS பெங்களூருவில் ஒரு திருவிழாவாக மாறியது. இதுவே இப்படத்தின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்தது. இது திரையுலகின் பெரிய சாதனை என்று கூறலாம்.