கூலிப்படைகளை வைத்து தனுசை காலி செய்யும் கூட்டம்.. குபேரா கொந்தளித்த முழு காரணம் – Cinemapettai

Tamil Cinema News

குபேரா படத்தின் ஆடியோ / ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷ் ஆதங்கத்தின் உச்சகட்டத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அதிலும் முக்கியமாக சுத்தி இருக்க மொத்த கூட்டமும் தனுசை காலி செய்ய நினைக்கின்றனர் என்பது போன்று பேசி இருப்பார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் மேடையில் ஆவேசத்துடன் பேசி உள்ளார் தனுஷ். நேரடியாக சிலரை அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியும் இணைய கூலிப்படைகளை வைத்து பல மோசமான வேலைகளை செய்துள்ளனர். இதில் வரிசையாக லிஸ்ட் போட்டு கூறியுள்ளார் வலைப்பேச்சு பிஸ்மி.

நயன்தாரா, சிவகார்த்திகேயன், சிம்பு ரசிகர்கள் இதைத் தவிர ஒரு தனி மனிதனை கேரக்டர் அசாசினேஷன் பண்றது மிகக் கொடுமையாக பார்க்கப்படுகிறது. படம் வெளி வருகிறது என்றால் அதை எப்படி காலி செய்யலாம் என்பது போன்ற திட்டத்தில் ஒரு கூட்டமே செயல்பட்டு வருகின்றது.

சிம்பு-தனுஷுக்கு இடையே எப்போதுமே போட்டி போட்டு மாத்தி மாத்தி ரசிகர்கள் இணையத்தில் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். இதற்கிடையில் சில விசமிகளின் விசுவாசிகள் ஜெயம் ரவி அவர் மனைவியை பிரிவதற்கு தனுஷ் தான் காரணம் என்பது போன்ற புரளியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கின்றனர். யார் பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணாலும் அதற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

சினிமாவைப் பற்றி எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அந்த ஹீரோ தாங்கிக் கொள்ள முடியுமானால் இது போன்ற பர்சனல் கேரக்டரை வைத்து அசிங்கப்படுத்தும் போது தனக்குள் இருக்கும் மொத்த கோவமும் வெளிப்பட்டுவிடும். என்னதான் இவ்வளவு சர்ச்சை சிக்கல்கள் வந்தாலும் தனுஷ் தன்னோட பாதையில வேற மாதிரி சக்சஸ் செய்துதான் வருகிறார்.

நாளை வெளியாக உள்ள குபேரா படத்தின் புக்கிங் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. முதல் நாளில் வசூல் சாதனை படைக்க வேண்டிய எதிர்பார்க்கப்படுகிறது. சேகர் கம்புல்லா கைவிட மாட்டார் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.