70 வயது ரஜினியை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்திருக்கிறார் லோகேஷ். ஆக்சன், ஹியூமர், சென்டிமென்ட் என எல்லாத்தையும் ரஜினியை வைத்து செமையா ஸ்கெட்ச் போட்டுள்ளார். குறிப்பாக ரஜினியை பறக்க விடாமல் இவர் செய்திருக்கும் ஆக்சன் காட்சிகள் கைதட்டளை வர வைத்தது.
மேன்ஷன் ஃபைட் மற்றும் லேடிஸ் ஹாஸ்டல் பைட்:
தேவராஜ் மேன்ஷன் என்று தங்கும் விடுதி நடத்தி வருகிறார் ரஜினி. இந்த இடத்தில் நடக்கும் சண்டை காட்சிகளில் ரஜினி எதார்த்தமான ஹுமர் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நாயுடு தெலுசு, ரெட்டி தெலுசு, ஏன் அனுஷ்கா கூட தெரியும் என்று சிரிக்க வைத்திருக்கிறார்.
Flashback Bus fight:
ரஜினியை டி ஏஜிங் மூலம் காட்டியிருக்கிறார். கூலியாய் வேலை செய்யும் ரஜினி அங்கே நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்டு, மூட்டை தூக்கும் கொக்கியால் எதிரிகளை பஸ்ஸுக்குள் துவம்சம் செய்கிறார். பின்னால் இருந்து ரஜினியை காட்டுகிறார்கள் சண்டை முடிந்ததும் முகத்தை காட்டும் சிறுவயது ரஜினி அட்டகாசம்.
சௌபின் ஜாகீர்: நாகர்ஜுனாவை தாண்டி சௌபின் செய்யும் அட்ராசிட்டி படத்துக்கு பிளஸ் பாயிண்ட் . இவர் மனைவியாக வரும் ரட்சிதா ராம் திடீரென வேறொரு முகம் காட்டுவது சரியான ட்விஸ்ட் . ஆரம்பத்திலேயே யாரும் எதிர்பார்க்காத சௌபின் இறப்பும், அவரது மனைவி காட்டும் அதிரடியும் வேற லெவல் சம்பவங்கள்.
உபேந்திரா introduction: முரட்டு ஆளாக வரும் இயக்குனர் தமிழ் மேன்சனில் 20- 30 அடியாட்களோடு இறங்குகிறார். அங்கே ரஜினி பழைய நண்பர்கள் 18 பேருடன் இருக்கிறார். மறைந்திருக்கும் அந்த 19வது நண்பர் தான் உபேந்திரா. அங்கே வரும் அடியாட்களை, 19 நண்பர்களும் புரட்டி எடுக்கிறார்கள்.