Coolie: ரஜினிகாந்தின் கூலி படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த ட்ரைலருக்கு கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கூலியை தட்டி தூக்கி விட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.
போட்டின்னு வந்துட்டா எல்லா இடத்திலும் மோதிப் பார்த்திட வேண்டியதுதான் என்பதுதான் இப்போதைய ட்ரெண்ட். படம் ரிலீஸ் ஆகி வசூல் போட்டி எல்லாம் பிறகு, இப்போது யூடியூபில் எத்தனாவது இடத்தில் ட்ரெண்டில் இருக்கிறது, ட்விட்டரில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது என்பது மிகப்பெரிய போட்டி.
கூலியை காலி பண்ணிய வாஷிங்டன் சுந்தர்
ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் ரஜினிகாந்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளி இருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். முதல் இடத்தில் நேற்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்ததால் வாஷிங்டன் சுந்தர் தான் இருந்தார்.

அப்போதைய கிரிக்கெட் ஆர்வத்தில் ட்விட்டரில் அம்புகள் பறக்க விடப்பட்டாலும், சில மணி நேரத்தில் இந்திய அளவில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் கூலி படம் வந்துவிட்டது.