Logesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் அவர்கள் தற்போது இருக்கும் சினிமா துறையில் ஒரு உயர்ந்த இடத்தில் உள்ளார். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வரிசையாக வெற்றி படங்களாக அமைந்தது இவரின் சிறப்பம்சம்.
அது மட்டுமல்லாமல் தற்போது வெளிவர வரைக்கும் கூலி படமும் இதுவரை இவருக்கு பெருமையை மட்டுமே தேடிக் கொடுத்திருக்கிறது. இன்னும் இவர் நிறைய உச்சத்தை அடைய வேண்டும் என்றும், இவர் படத்தில் நடிக்க ஆசை என்றும் நிறைய திரை பிரபலங்கள் கூறி வருகின்றனர்.
கூலியை விட மாரீசன் தான் கதை நல்லாருக்கு..
இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்று கூலி படத்தில் நடிப்பதற்காக முதலில் “பஹத் பாசில் ” சாரை அணுகினேன். ஆனால் அவருக்கு கால்ஷீட் கிடைக்கவில்லை. அதனால்தான் நான் “சௌபின் ஷாஹிர்” அவர்களை தேர்வு செய்தேன்.
ஆனால் “சௌபின் சாஹிர்” அவர்கள் அவரது கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். நான் முற்றிலும் இதை எதிர்பார்க்கவில்லை என்றும், லோகேஷ் கனகராஜ் அவர்கள் “சௌபின் சாஹிர்” அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
இதுஒருபக்கம் இருக்க “பஹத் பாசில் ” கூலி படத்தின் கதையை விட “மாரீசன்” பட கதை நன்றாக இருந்ததால்தான் நடிக்க வரவில்லை என்றும் ஒரு தகவல் வெளிவட்டாரங்களில் பரவிவருகிறது.
கூலி படமும், மாரீசன் படமும் வெளிவந்தால் தான் இந்த புரளி பேச்சு உண்மையா இல்லையா என்பது தெரியவரும். அதுமட்டுமல்லாமல் உண்மையிலயே “பஹத் பாசில்” அவர்களில் கால்ஷீட் கிடைக்கவில்லையா ?என்பதும் தெரியவரும்.