Coolie First Day Collection: நேற்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூலி படம் வெளியானது. லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் இப்படம் அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.
முதல் பாதி ஆர்ப்பாட்டம் இல்லாமல் தொடங்கினாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பை கூட்டி படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெயிட்டாக இருக்கிறது.
இப்படிப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை எல்லாம் தாண்டி கூலி நன்றாக இருக்கிறது என்பதுதான் பொதுவான விமர்சனம்.
முதல் நாள் வசூல் ரிப்போர்ட்
இப்படி சோசியல் மீடியாவில் பெரும் விவாதம் நடந்து கொண்டிருக்க படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்ற தகவலும் கசிந்துள்ளது. அதன் படி தமிழகத்தில் மட்டுமே இப்படம் 30 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.
அதேபோல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகியவற்றிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது இந்திய அளவில் 65 கோடிகள் வரை இப்படம் முதல் நாளில் கலெக்ஷன் பார்த்து இருக்கிறது.
அதை தொடர்ந்து வெளிநாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் அங்கும் 75 கோடி வரை வசூல் வேட்டை நடந்துள்ளது. மொத்தத்தில் முதல் நாள் மட்டுமே 140 கோடிகளை வசூலித்திருக்கிறது.
விடுமுறை இல்லாத தினத்திலேயே இப்படி என்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது. இதில் நிச்சயம் இந்த கலெக்ஷன் பல மடங்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாவது நாளான இன்றும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்றைய நாளின் முடிவில் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமான வசூல் ரிப்போர்ட்டை அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.