Rajini : கூலி படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் வெளியாக உள்ளதால் இப்போதே ப்ரோமோஷனில் லோகேஷ் இறங்கிவிட்டார். அதில் கூலி படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விஷயங்கள் மற்றும் படத்தின் கதையில் இருக்கும் ட்விஸ்ட் ஆகியவற்றை கூறி வருகிறார்.
இந்த சூழலில் கூலி சூட்டிங்கில் ரஜினி என்ன செய்வார் என்பதை பற்றி லோகேஷ் பேசி இருக்கிறார். அதாவது ஜெயிலர் 2 படத்திற்குப் பிறகு ரஜினி தன்னுடைய பயோபிக்கில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கான கதையை தான் ரஜினி எழுதி வருகிறாராம்.
இதைப்பற்றி லோகேஷ் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது கூலி படத்தின் கடைசி இரண்டு ஷெட்யூல்களில் ரஜினி தன்னுடைய சுயசரிதையை எழுதுவதில் மும்மரம் காட்டி இருந்தாராம். அதாவது படப்பிடிப்புக்கு இடையே இருக்கும் ஓய்வு நேரத்தில் ரஜினி எழுதுவாராம்.
கூலி படப்பிடிப்பில் ரஜினி செய்யும் வேலை
அப்போது அந்த காலகட்டத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை நினைவு கூர்ந்து லோகேஷ் இடம் பகிர்வாராம். மேலும் தன்னைத் தவிர வேறு யாரிடமும் இதை ரஜினி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதையும் லோகேஷ் கூறியிருக்கிறார்.
ரஜினி கூறிய அந்த விஷயங்கள் தன்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும் லோகேஷ் கூறியிருக்கிறார். ஆகையால் கண்டக்டர் முதல் சூப்பர் ஸ்டார் ஆக மாறிய ரஜினியின் பயோபிக் கண்டிப்பாக மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆகையால் ரஜினியின் கேரியரில் பல பிரச்சனைகளை தாண்டி தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறார். அதோடு 70 வயதை கடந்தும் படத்தின் நாயகனாக தற்போது வரை இருந்து வருவது சாதாரண விஷயம் அல்ல. இன்னும் அவர் பல வெற்றிகளை தொட வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.