கூலி படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் நாகார்ஜுனா ( சைமன் சேவியர்) இதுவரை நேரடியாக 6 தமிழ் படங்கள் மட்டுமே நடித்துள்ளார். எப்பொழுதுமே ரொமான்டிக் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்தினம் நாகர்ஜுனாவை 90களில் ஹீரோவாக தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழில் நாகார்ஜுனா கொடுத்த 6 சூப்பர் ஹிட் படங்கள.
இதயத்தை திருடாதே: 1989ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய சூப்பர் ஹிட் படம் இதயத்தை திருடாதே. குழந்தை நட்சத்திரமாக அவர் தமிழில் நடித்திருந்தாலும் ஹீரோவாக நடித்த முதல் படம் இது. இளையராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
ரட்சகன்: முதல் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தான் தமிழில் அடுத்த படமான ரட்சகன் நடித்தார். காதல் கலந்த அதிரடி ஆக்சன் வரிசையில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை K.T குஞ்சு மோகன் தயாரித்திருந்தார்.
பயணம்: 2011ஆம் ஆண்டு ஃப்லைட் ஹைஜெக் திரில்லர் படமான இதில் நடித்திருந்தார் நாகார்ஜுனா. இந்த படமும் அவருக்கு சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் இயக்குனர் ராதா மோகன் இதை இயக்கியிருந்தார்.
தோழா & குபேரா: கார்த்தியுடன் சேர்ந்து தோழா படத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் அனுஷ்கா செட்டி, தமன்னா போன்றவர்கள் ஹீரோயினாக நடித்திருந்தனர். இதுவும் அவருக்கு ஹிட் வரிசையில் இணைந்தது.சமீபத்தில் தனுசுடன் தெலுங்கு மற்றும் தமிழில் வெளிவந்த குபேரா படத்திலும் நடித்திருந்தார்
கூலி: சைமன் சேவியர் என்ற கதாபாத்திரத்தில் தற்போது வெளிவந்த ரஜினியின் கூலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் மூலம் இதுவரை இவர் நேரடியாக ஆறு தமிழ் படத்தில் நடித்துள்ளார். அத்தனையும் ஹிட் வரிசையில் இணைந்துள்ளது.