coolie : “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவரவிருக்கும் கூலி படம் திரைக்கு வருவதற்கு முன்பே பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த திரை படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடித்து இந்த படத்தை பிரபலமாக பேசப்பட வைத்திருக்கிறார்கள் எனவே கூறலாம். லோகேஷ் கனகராஜ் அவர்கள் இந்த படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த கூலி படமானது உலக அளவில் வரும் ஆகஸ்ட் 14 , 2025 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதுடன் மட்டுமல்லாமல், பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. படத்தை வெளியிடுவதற்கான உரிமையை பெறுவதற்காகவே சினிமாவை பார்க்க போவதை போல் விநியோகிஸ்தர்கள் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது தெலுங்கில் வெளிவர இருக்கும் தெலுங்கு மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை.
ஒரு டப்பிங் படத்திற்கு இத்தனை விநியோகிஸ்தர்கள் அடித்துக் கொள்வது மக்களிடையே பெரும் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. அவ்வாறு தெலுங்கில் கூலி படத்தின் உரிமையை பெறுவதற்காக 6 விநியோகஸ்தர்கள் போட்டிகளில் இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
கூலி படத்திற்காக அடித்துக்கொள்ளும் 6 பேர்..
அந்த வகையில் Nagavamsi, நாகர்ஜுனா, சுரேஷ் பாபு & ராணா, Asian suniel, Dil Raju மற்றும் “மைத்திரி மூவிஸ் மேக்கர்” ஆகியோர்கள் உரிமை கோரி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் இந்த படத்திற்கான ஆவலையும் மக்களிடையில் ஏற்படுத்தி உள்ளது.
ஒரு படத்திற்காக அதும் தெலுங்கு படம் அல்லாமல் டப்பிங் படத்திற்காக 6 விநியோகிஸ்தர்கள் உரிமை கோர போராடுவது, தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே முதல் முறை என பேசப்பட்டு வருகிறது. படம் ரிலீசே ஆகாமல் “கெத்து காட்டிய ரஜினிகாந்த்” என ரஜினிகாந்த்-ன் மீது பெரும் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது இந்த தகவல்.