ரஜினி : யாரும் அசைக்க முடியாத இடத்தில் இன்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்த நடிகர் அது ரஜினிகாந்த் தான். வயதானவளும் இன்னும் அந்த இளமையும், துடிப்பும் குறையாமல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் கூலி திரைப்படத்தின் அப்டேட் தான் அவ்வபோது வந்து கொண்டே இருக்கிறது. ரஜினியின் திரைப்படத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தலைவர் இந்த திரைப்படத்தில் மாஸ் லுக்கில் நடிக்கிறார்.
ஜெயலருக்குப் பிறகு காளி திரைப்படத்திலும் அனிருத் இசை பயங்கரமான பட்டையை கிளப்புகிறது. தற்போது வலைத்தளத்தில் செண்டிங்கில் இருக்கும் பாடலில் ஒன்று கூலி படத்தில் வரும் மோனிகா பாட்டு தான்.
இந்தப் பாடலுக்கு பூஜா ஹெக்டேக்கு பயங்கரமான வரவேற்பு கிடைத்தது. குத்துவிளக்காக சூர்யாவோட ரெட்ரோ படத்தில் ஜோடி போட்டு நடிச்சவங்க இன்னைக்கு கூலி படத்தில் இப்படி ஐட்டம் சாங்குக்கு டான்ஸ் ஆடினது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கமல் இணைகிறாரா..??
இந்தியன்-2 படம் வெற்றியடையும் என நினைத்த கமலுக்கு அந்தத் திரைப்படம் கை கொடுக்கவில்லை. சரி தக் லைப் திரைப்படத்திலாவது நெட் கொடுக்கலாம் என நினைத்த கமலுக்கு அதுவும் கை கொடுக்காமல் போனது.
தற்போது கூலி திரைப்படத்தில் ரஜினியுடன் கமல் இணைகிறார் என்று செய்தி வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கமல் எந்த கதாபாத்திரத்திலும் கூலி திரைப்படத்தில் நடிக்கவில்லை. தனது பின்னணி குரலில் கலக்க இருக்கிறார்.