Coolie: ரஜினியின் கூலி ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான டிஜிட்டல் ப்ரமோஷன் வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதே போல் அடுத்தடுத்த பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டு ட்ரெண்டிங்கில் உள்ளது.
இசை வெளியீட்டு விழா, ட்ரைலர் என சன் பிக்சர்ஸ் ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் முக்கியமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது லோகேஷ் படத்தில் ஒரு சர்ப்ரைஸ் வைக்க திட்டமிட்டுள்ளார்.
என்னவென்றால் தலைவர் படத்தில் கமல் எந்த விதத்திலாவது வரவேண்டும் என்பது அவருடைய எண்ணம். தற்போது சூட்டிங் முடிந்து படமே திரைக்கு வர தயாராகி விட்டது. அதனால் அவரை நடிக்க வைப்பது சாத்தியம் கிடையாது.
கூலி படத்தில் கமல் இருக்காரா.?
வேறு என்ன செய்யலாம் என யோசித்த லோகேஷ் இப்போது அவருடைய குரலை படம் தொடங்குவதற்கு முன்பு கொண்டு வரலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம். ஆனால் இது குறித்து இன்னும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசவில்லை.
ரஜினிக்காக என்றால் கமல் மறுக்க மாட்டார். அந்த நம்பிக்கையில் லோகேஷ் தற்போது ஆண்டவரிடம் பேச தயாராகி வருகிறார். விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் இது மிகப் பெரிய ப்ரமோஷன் ஆக இருக்கும். அதே போல் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ரஜினி படம் பண்ணுவதற்கு கூட வாய்ப்பாக அமையும்.