Coolie : சூப்பர் ஸ்டார் படம் என்றாலே எப்போதும் “ஹைப்” தான். அந்தவகையில் தற்போது வெளிவரவிருக்கும் கூலி படத்திற்கு இந்த “ஹைப்” எல்லாம் இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.
கூலி படத்தில் ரஜினி ஹீரோ ரோல் பன்றாங்கன்னு தெரியும். இதைத்தவிர கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா, மலையாள நடிகர் சௌபின், தமிழ் பிரபலம் சத்யராஜ், அமீர்கான் ஆகியோரையும் இந்த படத்தில் இணைத்துள்ளார் லோகேஷ்.
யாருக்கு அதிக நேரம்?
இந்த பிரபலங்களுக்கும் சினிமாவில் தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ரஜினியை தவிர மற்ற நடிகர்களின் படக்காட்சிகள் மிகவும் குறைவாக இடம்பெற்றுள்ளதாக இந்த பிரபலங்களின் ரசிகர்கள் கொந்தளிக்கிறார்களாம்.
ஆமாம், இந்த படத்தில் நாகர்ஜூனா 15 நிமிடம்தான் வருவாராம். இதற்கு அடுத்ததாக சௌபின் 20 நிமிடத்திற்கு மட்டும் வருவாராம், அமீர்கான் வெறும் 5 நிமிடம் தான் வருவாராம். சத்யராஜ்க்கு 20 நிமிடம் மட்டும்தான் படக்காட்சியாம் இவ்வாறு தகவல்கள் கசிந்துள்ளன. இந்த நேரத்தை பார்த்தால் அமீர்கானை விட நாகர்ஜூனா அதிக நேரம் திரையில் வருவார் போல.
இதனால் தற்போது இந்த பிரபலங்களின் ரசிகர்கள் எல்லாம் உங்களுடைய பட மார்கெட்டிங்-காக இவங்களையெல்லாம் யூஸ் பண்ணிருக்கீங்களா லோகேஷ்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனராம்.
இந்த பிரபலங்கள் வருவது குறைந்த நிமிடங்கள் என்றாலும் இந்த படத்தில் இதெல்லாம் “goosebumps” தருணமா இருக்குமாம். லோகேஷின் வெற்றி ரகசியமே இதுதான், அதுமட்டுமல்லாமல் இதுதான் இவருடைய டெக்னிக்.
லோகேஷ் படம் வெற்றியடை காரணமே இவர் செய்யும் மார்கெட் தந்திரங்கள்தான் என ஒருசிலர் சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்களாம். தந்திரமோ, மந்திரமோ லோகேஷ் இயக்கம் என்றாலே இங்கு இளைஞர்களுக்கு பிடித்த ஒன்றாக இருப்பதாலே படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடுகிறது. அதேபோல் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வருகிறது.