Coolie : கூலி, கூலியென எங்கு பார்த்தாலும் கூலியின் சத்தம்தான் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருவேளையாக இன்று கூலி படம் திரையிடப்பட்டு மக்களும் அதை பார்த்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். ஒரு படம் கோடிக்கணக்கில் வசூல் செய்வது என்பது முக்கியம் இல்லை.
ஒரு படம் என்பது, மக்கள் வாங்கி பார்க்கும் டிக்கெட் காசிற்கு மக்களை திருப்திப்படுத்தினால் போதும் என்பதே பொதுமக்கள் கருத்து. அந்த வகையில் மக்கள் எதிர்பார்ப்பை தாண்டி மக்களை திருப்திபடுத்திவிட்டார் லோகேஷ். படம் அட்டகாசமாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
கூலி படத்தில் நாகர்ஜூனாவை மிஞ்சிய தயாள்..
இந்த படத்தில் ரஜினிக்கு வில்லன் நாகார்ஜூனாதான். நாகர்ஜூனாவின் நடிப்பு சூப்பராக இருந்தது என்று அனைவரும் பாராட்டியுள்ளார்கள். ஆனால் என்னதான் நாகார்ஜூனா வில்லனாக இருந்தாலும், அதை தாண்டிய வில்லத்தனத்தை செய்து தயாள் என்கிற சௌபின் சும்மா மிரட்டி விட்டிருக்கிறாராம்.
படம் பார்த்த யாருமே! சௌபினை பற்றி பேசாமல் இல்லை, அவரது ரோல் மிகவும் நன்றாக உள்ளது என்றும், நடிப்பில் சும்மா மனுஷன் வேற லெவல் பண்ணிட்டாரு என சௌபினை புகழ்ந்து தள்ளியுள்ளார்கள் மக்கள்.
மலையாள நடிகர் மோகன்லால், மம்மூட்டி, நிவின் பாலி, பகத் பாசில் இவர்களுக்கு பிறகு சௌபின்-க்கு தமிழில் தனி ரசிகர் பட்டாளம் உருவானாலும் ஆச்சரியமில்லை. படத்தில் நாகர்ஜூனாவை மிஞ்சி விட்டார் தயாள். இவருக்காகவே படத்தை பார்க்கலாம் என்றும் கூறி வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் என்னதான் அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ் போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தாலும் கூட, படத்தில் உள்ள மொத்த ஸ்கோரையும் அடிச்சிட்டு போயிட்டாரு சௌபின். கூலி படமானது சௌபின்-க்கு இன்னும் நிறைய பட வாய்ப்புகளை பெற்று தரும். இவரை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதையும் எந்த மாற்றமும் இல்லை.
என்னதான் நாகார்ஜூனா கூலி படத்துல நான்தான் ஹீரோ மாதிரி இருப்பேன்னு ஆடியோ லான்ச்-ல சொன்னாலும் கூட. அந்த இடத்தையே காலி பண்ணி தனக்கென அடையாளத்தாயே உருவாக்கி விட்டார் சௌபின்.