Coolie: இதோ அதோ என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கூலி நாளை வெளியாகிறது. இதற்காகவே காத்திருந்த தலைவரின் ரசிகர்கள் முதல் காட்சியை தெறிக்க விட முடிவு செய்து விட்டனர்.
பல கார்ப்பரேட் கம்பெனிகள் இதற்காக விடுமுறை அறிவித்திருக்கிறது. அதேபோல் எத்தனை ஆயிரம் செலவானாலும் சரி டிக்கெட்டை வாங்காமல் விடமாட்டேன் என எல்லோரும் கிளம்பி விட்டனர்.
டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களில் அத்தனையும் விற்று தீர்ந்து விட்டது. இது எல்லாம் தலைவர் ஒருவருக்காக தான் என்பதை மறுக்க முடியாது.
இப்படி கூலி படம் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு அலப்பறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் சோசியல் மீடியா அலப்பறை வேறு ரணகளமாக இருக்கிறது. படத்துல அவங்க கேமியோ இவங்க கேமியோ என வரும் செய்திகள் படகுழுவுக்கே புதுசு தான்.
என்ன லோகி பண்ணி வச்சிருக்கீங்க
அட இது கூட நல்லா இருக்கே என இயக்குனர் யோசிக்கும் அளவுக்கு நம்ம ஆட்கள் புதுப்புது செய்தியாக பரப்பி வருகின்றனர். ஏற்கனவே கமல், சிவகார்த்திகேயன் கேமியோ இருக்கிறது என்ற அலப்பறை இப்போதுதான் முடிந்துள்ளது.
ஆனால் இப்போது பார்த்தால் கலாநிதி மாறன் கேமியோ ரோலில் வந்திருக்கிறார் என்ற செய்தி தான் ஆட்டம் காண வைத்துள்ளது. என்னடா இது புது புரளியா இருக்கு என விசாரித்து பார்த்ததில் தலைவரின் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் செய்த வேலை என தெரிய வந்திருக்கிறது.
அவ்வளவு பெரிய தொழிலதிபர், தயாரிப்பாளர் இப்படி நடிப்பதற்கு சாத்தியமே கிடையாது. அவருடைய ஒவ்வொரு நிமிஷமும் பல கோடிகளுக்கு சமம். எப்படி இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறாங்களோ தெரியலையே.