Memes: லோகேஷ் ரஜினி கூட்டணியின் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளி வருகிறது. அதற்கான ப்ரமோஷன் வேலைகள் இப்போது ஜோராக நடந்து வருகிறது.

அதேபோல் சினிமா விமர்சகர்கள் படம் ஆயிரம் கோடி அடிக்கும் என பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். youtube சேனல்கள் கூட இதை வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது.

அதேபோல் லோகேஷ் ஸ்ருதிஹாசன் என எல்லோரும் வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகின்றனர். அதில் ஸ்ருதி இந்த படத்தில் எனக்கு மேக் அப் கிடையாது என்று கூறியுள்ளார்.

இதை நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இதெல்லாம் எங்களுக்கு தேவையில்ல படத்துல லோகி உன் கழுத்தை வெட்டுவாரா மாட்டாரா அதை சொல்லு என கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல் எல்லாரும் மோனிகா பாட்டு வைப்ல இருக்காங்க. ஆனா நான் இன்னும் சிக்கிடு வைப்ல தான் சுத்திக்கிட்டு இருக்கேன்.

இப்படி சோசியல் மீடியாவில் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி நம்மை பார்த்ததும் ரசிக்க வைத்த சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
