Coolie: லோகேஷ், ரஜினி கூட்டணியில் கூலி வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான பிரமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ஹிட் ஆகிவிட்டது.
அடுத்த பாடல் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்த பரபரப்பு ஒரு பக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம் இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் என ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கூலி படத்தின் வாய்ப்பை பகத் பாஸில் மறுத்து விட்டதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. இது எல்லோருக்கும் ஆச்சரியம்தான். ஏனென்றால் வேட்டையன் படத்தில் இவர் சூப்பர் ஸ்டாரோடு இணைந்து நடித்திருக்கிறார்.
அப்படி இருந்தும் இன்னொரு வாய்ப்பை அவர் ஏன் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். சூப்பர் ஸ்டாரோடு நடிக்கும் வாய்ப்புக்காக பல பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பகத் பாஸில் மறுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.
வடிவேலு தான் காரணமா.?
என்னவென்றால் அந்த சமயத்தில் மாரீசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்திருக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த அவர் வடிவேலு படத்தை தேர்ந்தெடுத்து விட்டார்.
அப்படி என்றால் கூலி படத்தில் அவருடைய கேரக்டர் என்ன என்று தோன்றலாம். மலையாள நடிகர் சௌபின் நடித்துள்ள கேரக்டருக்கு தான் முதலில் பகத் பாசிலை அணுகி இருக்கின்றனர். அதைவிட மாரீசன் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
மாமன்னனுக்குப் பிறகு வடிவேலுவுடன் அவர் மீண்டும் இணைந்து நடிக்கிறார். வரும் 25ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே ட்ரைலர் ரசிகர்களை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்து விட்டது.
நிச்சயம் படம் ஹிட் அடிக்கும் என சினிமா விமர்சகர்களும் கூறுகின்றனர். அப்படி ஒரு சிறந்த கேரக்டர் என்பதால் தான் ரஜினிக்கு நோ சொல்லிவிட்டு வடிவேலு படத்துக்கு ஓகே சொல்லி இருக்கிறார் பகத் பாஸில்.