தமிழ் மற்றும் இந்தி சினிமா உலகில் ஆகஸ்ட் 14 ஒரு பெரிய திரைப் போரை ஒரு பெரிய போரை எதிர் கொள்ள இருக்கிறது. ரஜினிகாந்த் லோகேஷ் இணையும் கூலி மற்றும் ஹ்ரித்திக் ஜூனியர் என்.டி.ஆர் இணையும் வார் 2 ம் திரையரங்குகளுக்கு வர உள்ளன. இரு படங்களுமே ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வார் 2 படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு ரசிகர்கள் ரயில் நிலையங்களில் கூலி படம் ப்ரோமோஷன் ரயிலில் வந்ததை அனைவரும் பார்த்து ஆச்சரியத்தில் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். கூலி மாதிரி வார் 2 ரயில் நிலைய கிரியேட்டிவ் ப்ரோமோஷன் செய்யவில்லை. ஆனால் வார் 2 மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு குறையவில்லை என்றே கூறலாம்.
மும்பை ரயில் நிலையங்கள் முழுவதும் Coolie swag காட்சியளித்தது. இந்த புதுமையான விளம்பரம் சமூக வலைதளங்களில் பெரும் அளவில் வைரலாகி வருகிறது. ஒருபுறம் வார் 2 நிகழ்ச்சியும் மறுபுறம் கூலியின் கிரியேட்டிவ் ப்ரோமோஷனும் ரசிகர்களை இரட்டிப்பு உற்சாகத்தில் ஆழ்த்தின.
வெளிநாட்டு முன்பதிவுகளில் கூலி முன்னிலை வகிக்கிறது. ஆனால் வடநாடு மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வார் 2 அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டும் தங்களுக்கென வலுவான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளன.
வார் 2 ஹ்ரித்திக் ரோஷனின் அதிரடி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் வருகையை திரையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கூலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கவர்ச்சி மற்றும் லோகேஷ் கனகராஜின் கதை சொல்லும் திறமையை ஆயுதமாக கொண்டுள்ளது. இரண்டுமே ஹிட் தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆகஸ்ட் 14 திரைப் போர் கூலி vs வார் 2 யார் வெல்லப் போகிறார்கள்? என்று
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மீம்ஸ்களும் சவால் வீடியோக்களும் சூடு பிடித்துள்ளது. படம் ரிலீஸ் கு பிறகு தான் தெரியும் எந்த படம் ஹிட் அடிக்கும் என்று.