Suriya: எல்லாமே இனிமேல் நல்லா தான் நடக்கும் என்பது போல் சூர்யா தரப்பில் இருந்து அவருடைய ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது. நடிகர் சூர்யா தன்னுடைய 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நேரத்தில் தன்னுடைய சினிமா கேரியருக்காக ஒரு முக்கிய முடிவையும் எடுத்து இருக்கிறார்.
சூர்யாவிற்கு சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் OTT ரிலீஸ் க்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் இல்லை. தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கூட ஏதோ ஒரு இடத்தில் சூர்யாவுக்கு சறுக்கிக் கொண்டே இருந்தது.
சூர்யா எடுத்த முக்கிய முடிவு
தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கருப்பு திரைப்படம் தான் சூர்யாவுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது. ஒரு பக்கம் ஆர்ஜே பாலாஜி, இன்னொரு பக்கம் கருப்பு படத்திலிருந்து சூர்யா சதீஷ் என்பவரை தன்னுடைய பிஆர்ஓ ஆக நியமித்திருக்கிறார்.

இதை சதீஷ் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இவர் தான் தற்போது கமல் மற்றும் சிம்புவுக்கு பிஆர்ஓ. விக்ரம் படத்திற்கு பிறகு கமலுக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அதேபோன்றுதான் சிம்பு தற்போது தொட்ட இடமெல்லாம் துலங்குகிறது.
இந்த வரிசையில் சூர்யாவின் சினிமா கேரியர் இனி ஏறுமுகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சதீஷ் எக்ஸ் பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவிப்பதோடு மீண்டும் பழைய சூர்யாவை கொண்டு வாருங்கள் என தங்களுடைய எதிர்பார்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.