Dhanush-KPY Bala: தனுஷ் கணக்கு பார்க்காமல் எல்லோருக்கும் உதவுவார். சிம்பு படத்துக்கு காசு வாங்காமல் ராயல்டி கொடுத்ததில் தொடங்கி பல விஷயங்களை அவருடைய ஆதரவாளர்கள் சோசியல் மீடியாவில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
அப்படி இருப்பவர் தன்னுடன் நடித்த சக நடிகர் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார் என்று தெரிந்தும் கண்டுக்காமல் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. மீடியாவில் செய்திகள் வந்தும் கூட அவரிடம் இருந்து உதவி கிடைக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதாவது அவருடைய அறிமுக படமான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தவர் தான் அபினய். சாக்லேட் பாய் தோற்றத்தில் இருக்கும் இவர் ஏகப்பட்ட விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில் தனக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பதாகவும் ஆப்ரேஷனுக்கு இலட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போட்டோவும் கூட வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாலாவுக்கு இருக்கும் மனசு தனுஷுக்கு இல்லையே
இந்நிலையில் விஜய் டிவி புகழ் பாலா ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவி இருக்கிறார். அபினய் வீட்டுக்கு சென்ற அவர் அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்து ஆறுதல் கூறி இந்த பணத்தை கொடுத்து இருக்கிறார்.
இது நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் தனுஷ் கூட அக்கறை காட்டாத நிலையில் பாலா தேடி வந்து உதவி இருப்பது அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்தி இருக்கிறது.
அது சரி தனுஷ் ஏன் இவரை கண்டு கொள்ளவில்லை என்ற கேள்வி இருக்கலாம். விசாரித்த வரையில் துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் மனக்கசப்பு இருந்திருக்கிறது.
அந்த பிரச்சினையால் தான் தற்போது தனுஷ் அமைதி காப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. என்ன இருந்தாலும் உயிருக்கு போராடுபவர் முன் இந்த ஈகோ தேவைதானா?