Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், கொடூரத்தின் உச்சத்துக்கே சென்ற குணசேகரன் யாரும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்ய துணிந்து விட்டார். அதாவது நான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்ற அகங்காரத்தில் குணசேகரன் பிடிவாதமாக தர்ஷனுக்கும் அன்பு கருத்துக்கும் கல்யாணம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்.
ஆனால் என்ன ஆனாலும் உங்களுடைய வன்மத்தை காட்டுவதற்கு என்னுடைய பையனை நான் பலியாடாக சிக்க விடமாட்டேன் என்று ஈஸ்வரி தர்ஷனுக்கும் பார்க்கவிக்கும் கல்யாணத்தை பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ணுகிறார். இந்த சூழ்நிலையில் உங்க சகவாசமே எனக்கு வேண்டாம் என்று உதறி விட்டு பார்கவி கண்காணாத இடத்துக்கு போக வேண்டும் என்று கனடா போவதற்கு தயாராகி விட்டார்.
ஆனால் ஜனனி எப்படியும் நான் பார்க்கவியை கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து நம்மளை மாதிரி குணசேகருக்கு பார்க்கவியை அடிமையாக்காமல் விடமாட்டேன் என்று ஜனனி கங்கணம் கட்டிக்கொண்டு கும்பகோணத்திற்கு போய்விட்டார். போன இடத்தில் விசாரித்து ஜீவானந்தம் இருக்கும் இடத்திற்கு போய் விடுகிறார்.
ஜனனியை பார்த்ததும் பார்கவி எமதர்மராஜாவையே நேரில் பார்த்து விட்டோம் என்பதற்காக ஏற்ற மாதிரி பயத்தில் ஓடி போகிறார். ஆனால் எமதர்மராஜன் பாசக்கயிறு போட்டு கூட்டிட்டு போவது போல் பார்க்கவிடம் அன்பாக பேசி நைசாக கூட்டிட்டு போக முயற்சி எடுக்கிறார். ஆனால் பார்கவி எடுத்து முடிவில் தெளிவாக இருக்கும் பட்சத்தில் ஜனனிக்கு போன் வருகிறது ஈஸ்வரி உயிருக்கு போராடுகிறார் என்று.
இதனால் ஈஸ்வரியை காப்பாற்றுவதற்கு ஜனனி ஜீவானந்தம் மற்றும் பார்கவி அனைவரும் கிளம்புகிறார்கள். இதற்கிடையில் ஈஸ்வரி உயிரை எடுத்த கொடூர அரக்கன் குணசேகரன் தான். அதாவது தன்னுடைய பையன் வாழ்க்கை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கடைசியாக ஒரு முறை குணசேகரன் பேசிப் பார்க்கலாம் என்று ஈஸ்வரி குணசேகரை தனியாக கூட்டிட்டு போகிறார்.
ஆனால் திருந்தாத ஜென்மம் குணசேகரன், நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரிடம் வாக்குவாதம் பண்ணினார். பின்னர் கொடூரத்தின் உச்சத்திற்கு சென்ற குணசேகரன் ஈஸ்வரி கழுத்தை பிடித்து நிறுத்து சாவு பயத்தை காட்டி விடுகிறார். இதனால் மூச்சு விட முடியாமல் உயிருக்கு போராடும் ஈஸ்வரியை தர்ஷன் நந்தினி ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகிறார்கள். ஆனாலும் ஈஸ்வரி டிராக் இதோடு முடியப்போகிறது என்ற தகவலின் படி ஈஸ்வரின் உயிர் பரிதாபமாக போகப்போகிறது.