Dhanush: நடிகர் தனுஷ் அவர்கள் தற்போதைய தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஒரு நடிகர். இவர் தற்போது நடித்து வெளிவந்திருக்கும் குபேரா படம் மூலம் pan இந்திய அளவில் பிரபலமாக்கப்பட்டுள்ளார்.
இவர் அடித்தடுத்து வசூலில் கொடிகட்டி பறக்குமளவிற்கு கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார் தனுஷ். அதுவும் அத்தனை படங்களும் கண்டிப்பாக கப் அடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
அப்படி கைவசம் எத்தனை படங்கள்தான் வைச்சுருக்காங்க, அதுவும் என்னன்ன படங்களாம் கைவசம் வைச்சுருக்காங்க பார்க்கலாம். தானே இயக்கி அடிக்கும் படம்தான் “இட்லி கடை” இந்த படமும் ரிலீஸ் ஆக தயாராகி கொண்டிருக்கிறது.
கோடிகளில் புரளப்போகும் தனுஷ்..
இதற்கு அடுத்ததாக “Tere ishq Mein” என்ற படம் நவம்பர் 28 அன்று ரிலீஸ் அகா காத்துக்கொண்டிருக்கிறது. “D 54” போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்க உள்ளார்.
இதற்கு அடுத்ததாக இயக்குனர் “தமிழரசன் பச்சமுத்து” அவர்களுடன் இனனித்து ஒரு படம் பண்ணப்போவதிகக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதோடு மதுவுமல்லாமல் “ராஜ்குமார் பெரியசாமி” இயக்கத்தில் படம் செய்ய போகிறாராம்.
அதுமட்டுமல்லாமல் “மாரி செல்வராஜ்” இயக்கத்தில் ஒரு படமும், “வெற்றிமாறன்” இயக்கத்தில் ஒரு படமும், “அப்துல்கலாம்” வாழ்க்கை வரலாறு பற்றிய படமும், இளையராஜா வாழ்க்கை வரலாறு படமும், புதுப்பேட்டை-2ம் எடுக்கப்போறாங்களாம். இதையெல்லாம் முடித்து விட்டு வெற்றிமாறனோடயே இன்னொரு படமும் பேசிக்கிட்ருக்காங்களாம்.
இதுபோல நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். தனுஷ் கூட்டணி போடும் இயக்குனர்களை வைத்தே படம் எந்தளவில் இருக்கும் என்பதை நாம் கணிக்க முடியும். அந்த வகையில் அணைத்து படங்களுமே மாபெரும் வெற்றியை தனுஷ் அவர்களுக்கு தேடி தரப்போகிறது. இனி தனுஷ் ரசிகருக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஆக தனுஷ் கோடிகளில் புரள தயாராகி கொண்டிருக்கிறார்.