Yogi Babu : ஒரு காலத்தில் யோகி பாபு ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட நிலையில் தன்னுடைய திறமையால் இப்போது கோடியில் புரண்டு வருகிறார். ஒருவரின் வெற்றிக்கு தோற்றம் தடை இல்லை என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் யோகி பாபு.
சின்னத்திரையில் இருந்து வந்த இவர் இப்போது காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். அந்த வகையில் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபு நடித்தது அப்போது பேசு பொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்த நிலையில் இப்போது இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் யோகி பாபுவின் சொத்து மதிப்பு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
யோகிபாபுவின் சொத்து மதிப்பு
அதாவது யோகி பாபு ஒரு படத்தில் காமெடி நடிகராக நடிக்க ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் வரை சம்பளம் பெற்று வருகிறாராம். அதுவே கதாநாயகனாக நடிக்க கிட்டதட்ட நான்கு முதல் ஐந்து கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதோடு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இப்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானின் ஜவான் படத்தில் கூட நடித்திருந்தார். இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 70 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
யோகி பாபுவிற்கு சொந்தமாக சென்னையில் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. மேலும் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். அவருடைய அசுர வளர்ச்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.