Cinema : உண்மையில் சினிமா என்பது தற்போது மக்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு வித்தையாக கருதப்படுகிறது. சினிமாவில் டாப் ஹிட் ஹீரோக்களுக்கு மதிப்பு அதிகம். தற்போது சினிமாவில் இருக்கும் டாப் 3 பில்லர்ஸ் யார் என்று தெரியுமா?
ஆதிகாலத்தில் இருந்து இப்போது வரைக்கும் சினிமாவில் கலக்கிய நடிகர்கள் விஜய் ரஜினி. இந்த இரண்டு பேரும் தான் மாற்றி மாற்றி சினிமாவில் ஒலிக்கும் பெயராக இருந்தது. இதில் தற்போது ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
சினிமாவில் தனக்கென்று எந்தப் பின்புலமும் இல்லாமல், என்ற சினிமாவில் ஜேஜே என்று வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். ரஜினி, விஜய் இவர்களின் வரிசையில் தற்போது டாப் லிஸ்டில் சிவகார்த்திகேயனும் சேர்ந்து விட்டார்.
கோலிவுட் 3 பில்லர்ஸ்..
ஒரு ஹீரோ சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் அவனுக்கு நடிப்பு திறமை மட்டுமின்றி ரசிகர்கள் கூட்டமும் அதிகம் வேண்டுமல்லவா? நடிப்பு திறமை மட்டும் இன்றி கதை தேர்தலும் ஒரு நடிகனுக்கு தேவை. அந்த புரிதல் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.
படத்தின் வசூலில் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் இவர்கள் தற்போது டாப் லிஸ்டில் இருக்கின்றார்கள். கோலிவுட்டில் ரஜினியின் கூலி திரைப்படம் 1000 கோடி வசூல் செய்யும் எனவும், விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்ற நம்பிக்கையும்
சிவகார்த்திகேயனின் மதராசி திரைப்படம் 500 கோடி வசூல் செய்யும் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்து வருகிறது. ஒரு சாதாரண நடிகையின் திரைப்படம் அவ்வளவு வசூலை எட்டும் பொழுது, டாப் ஹிட் பிரபலங்களின் திரைப்படங்கள் நிச்சயம் வசூல் செய்யும்.