
90 காலகட்டத்தில் முன்னணி இடத்தில் இருந்த நடிகைகள் எல்லோரும் தற்போது கோவாவில் சந்தித்துள்ளனர்.

ரீயூனியன் என்ற பெயரில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதில் மீனா, சிம்ரன், சங்கீதா, மாளவிகா, ரீமாசென், சங்கவி என ஒரு காலத்தில் கனவு கன்னிகளாக இருந்தவர்கள் சந்தித்துள்ளனர்.

இவர்களுடன் பிரபுதேவா, மோகன் ராஜா, சங்கர், கே எஸ் ரவிக்குமார், லிங்குசாமி என பலரும் இருக்கின்றனர்.

அதை நடிகை மீனா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதேபோல் இவங்களை எல்லாம் இப்படி ஒன்னா பார்த்து எவ்வளவு நாள் ஆயிடுச்சு என ரசிகர்களும் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். அதில் சிம்ரன் நரை முடியோடு கூலாக போஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.