Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், க்ரிஷ் பாட்டி எங்கே போயிருக்கிறார் என்று தேடுவதில் முத்து இருக்கிறார். மீனா க்ருஷை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து சாப்பாடு ஊட்டி தன் மகனைப் போல் பார்த்துக் கொள்கிறார். இதனை பார்த்து கடுப்பான விஜயா கோபமாக திட்டுகிறார். விஜயா கோபப்பட்டு சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.
அம்மா இருந்தும் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, பாட்டி அரவணைப்பில் இருந்து திடீரென்று பாட்டியும் காணாமல் போய்விட்டார். இதனால் இங்கே கூட்டி வந்து தேவையில்லாத பிரச்சினையை உண்டாக்குகிறார் என்று விஜய திட்டுகிறார். அப்பொழுது அங்கே வந்த மனோஜ், கிரிஷ்வை பார்த்து இன்னும் இவன் இங்கிருந்து போகவில்லையா என்று கேட்கிறார்.
அதற்கு விஜயா நடந்த விஷயத்தை சொல்லிய நிலையில் ரோகிணியை கூட்டிட்டு நான் இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று ஸ்ருதி ரவியை சந்தித்து பேசுகிறார். அப்பொழுது க்ரிசை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும், அதற்கு முத்து வழக்கம்போல் ஓட்டு போடச் சொல்லுவான். அப்பொழுது நீங்கள் கிரிஷ் வீட்டை விட்டு போக வேண்டும் என்று கை தூக்க வேண்டும் என சொல்கிறார்.
ரோகிணி இதையெல்லாம் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து எங்கே தேடியும் க்ரிஷ் பாட்டி இல்லை என்று வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்பொழுது மனோஜ் மற்றும் விஜயா பிரச்சனை பண்ணும் பொழுது மறுபடியும் முத்து ஓட்டு எடுக்கிறார். அதை எல்லாம் பார்த்த க்ரிஷ் என்னை இந்த வீட்டை விட்டு அனுப்பாதீர்கள் என்று ஒவ்வொருவரிடமும் கெஞ்சுகிறார்.
அப்பொழுது மனோஜ், கிரிஷ் வீட்டை விட்டு போக வேண்டும் என்று கை தூக்குகிறார். ஆனால் ரோகிணி கை தூக்காமல் இருந்த பொழுது மனோஜ் நீ என்ன அவனுக்கு சப்போர்ட் பண்ணி இறக்கப்படுகிறாயா என்று கேட்கிறார். உடனே ரோகினி மனோஜ்க்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கிருஷ்க்கு எதிராக கைத்தூக்கி விடுகிறார். இதனால் மனதளவில் கிருஷ் நொந்து போகப் போகிறார். இது எதுவும் தெரியாமல் பைத்தியக்காரர்கள் போல் முத்துவும் மீனாவும் கிரிஷ் மீது பாசத்தை கொட்டி வருகிறார்கள்.