Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கிரிஷ் பாட்டி எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் முத்து எல்லா பக்கமும் தேடி வருகிறார். ஆனால் அதற்குள் க்ரிஷ், தன்னுடைய வீட்டுக்குள் இருக்கக் கூடாது என்று விஜயா கோபமாக திட்டுகிறார்.
இன்னொரு பக்கம் மனோஜ்க்கும் கிரிஷ் இருப்பது பிடிக்கவில்லை. அதனால் வீட்டில் இருந்து எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று ரவி மற்றும் சுருதியிடம் பேசிவிட்டார்.. அந்த வகையில் முத்துவிடம் ஓட்டு எடுக்க சொல்லிய நிலையில் ரவி சுருதி இரண்டு பக்கமும் இல்லை என்பதற்கு ஏற்ப தனியாக நின்று விட்டார்கள்.
அடுத்ததாக விஜயா மனோஜ், கிரிஷ் இருக்கக் கூடாது என்று கையை தூக்கின நிலையில் ரோகிணி என்ன பண்ணுவது என்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார். உடனே ரோகிணியை பார்த்து இவனுக்காக இறக்கப்பட்டதெல்லாம் போதும் கையை தூக்கு என்று சொல்லிய பொழுது ரோகினி சுயநலமாக முடிவெடுத்து கையை தூக்கத்துக்கு தயாராகி விட்டார்.
இதை பார்த்து க்ரிஷ், ரோகிணி கையை பிடித்து என்னை எங்கேயும் அனுப்பாதீர்கள் நான் உங்க கூட தான் இருப்பேன் என்று கெஞ்சுகிறார். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொருவரிடமும் சென்று என்னை வேறு எங்கேயும் அனுப்பாதீர்கள் நான் இங்கே இருக்கிறேன் என்று தங்குவதற்கு கெஞ்சுகிறார்.
இதை பார்த்தும் ரோகிணியின் மனசு இறங்கவில்லை, அந்த அளவுக்கு கல்நெஞ்சாக இருக்கிறார். அடுத்து க்ரிஷ் இந்த வீட்டில் இருக்கக் கூடாது வெளியே போக வேண்டும் என்று விஜயா மனோஜ் சொல்லிய நிலையில் முத்து, க்ரிஷ் பாட்டியை தேடுகிறார்.
அப்பொழுது ஃபோட்டோவை வைத்து ஆட்டோக்காரங்க கிட்ட கேட்கும் பொழுது அதில் ஒரு நபர், இவர்களை நான் கோவிலில் இறக்கி விட்டேன் என்று சொல்லி விடுகிறார். உடனே முத்து மற்றும் மீனா அந்த கோவிலில் போய் கிரிஷ் பாட்டியை பற்றி விசாரிக்கிறார்கள்.
அங்கேயும் கோவில் பூசாரி நான் பார்த்தேன் என்று சில விஷயங்களை சொல்லுகிறார். அந்த வகையில் முத்துவும் மீனாவும் க்ரிஷ் பாட்டி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து , கிரிசை துஒப்படைத்து விடுவார்கள்.