Gossip: பெரிய செலிப்ரட்டிகளின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அந்த நடிகர் தன் தந்தையின் தொழிலை எடுத்து செய்து வருகிறார். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் கவனம் பெறாததால் முழு நேர வேலையில் இறங்கி விட்டார்.
அவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதேபோல் அவருக்கு ஒரு நல்ல பெயரும் இருக்கிறது. ஆனால் அந்த இமேஜ் இப்போது டேமேஜ் ஆகிவிட்டது.
சமீபத்தில் இவருடைய இரண்டாவது திருமணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல் மனைவியை விவாகரத்தில் செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் என வெளிப்படையான கேள்விகள் எழுந்தது.
சக்களத்தி சண்டை சூடு பிடிக்குது
ஆனால் சம்பந்தப்பட்டவர் அமைதியாக தான் இருந்தார். அதை தொடர்ந்து இப்போது முதல் மனைவியுடன் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்டு அடுத்த ஷாக் கொடுத்திருக்கிறார். என்னதான் நடக்குது இவங்க குடும்பத்துல என கேட்கும் அளவுக்கு சம்பவங்கள் ஏராளமாக இருக்கிறது.
இந்த வீடியோவும் போட்டோவும் வெளியான உடனே இரண்டாவது மனைவி தன் பங்குக்கு ஒரு போட்டோவை போட்டு பிறக்கப் போகும் குழந்தைக்கு பெயர் வைத்து விட்டேன் என்று அலப்பறை கொடுத்து இருக்கிறார்.
இப்பவும் அந்த நடிகர் அமைதியாக தான் இருக்கிறார். இரண்டு மனைவிகளும் சக்களத்தி சண்டை போடும் ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். ஆனால் மனுஷன் ரியாக்ஷன் கொடுக்காமல் இருக்கிறார் என சலசலக்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.