Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், மாயாவை வீட்டை விட்டு அனுப்பி சீனுவிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்று பத்மா பார்வதி லிங்கேஷ் ஆசைப்படுகிறார்கள். இவர்களுடைய ஆசையை தெரிந்து கொண்ட புவனேஸ்வரி இதன்மூலம் மாயாவுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.
அந்த வகையில் சாருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையை வைத்து காய் நகர்த்த போகிறார்கள். அதாவது சாருக்கும் சீனுக்கும் தவறான உறவு இருப்பதால் இந்த கல்யாணத்தில் சம்மதம் இல்லை என்று சாருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையே வைத்து ரகுராமிடம் சொல்லும்படி புவனேஸ்வரி, லிங்கேஷ் கிட்ட சொல்லி விடுகிறார். உடனே லிங்கேஷ், பத்மா பார்வதியிடம் இந்த விஷயத்தை சொல்லி விடுகிறார்.
அதன் பிறகு சாருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையே வரவைத்து பத்மா பார்வதி புவனேஸ்வரி சொன்னபடியே சொல்ல சொல்கிறார்கள். ஆனால் இதற்கு முன்னாடியே மாயா இந்த மாப்பிள்ளையை கடத்திட்டு போய் தன்னுடைய பேச்சைக் கேட்கும் படி டிராமா போட்டு விட்டார். அந்த வகையில் சாருவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையே மாயா தனம் மற்றும் கதிர் கடத்திட்டு போய் விட்டார்கள்.
கடத்திட்டு போனதும் அந்த மாப்பிள்ளை லிங்கேஷ்க்கு போன் பண்ணி புவனேஸ்வரி ஆட்கள் கடத்திவிட்டதாக சொல்ல சொல்கிறார்கள். இதனால் அதிர்ச்சியான லிங்கேஷ் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பத்மாவிடம் புலம்புகிறார். பத்மா எப்படியாவது இந்த பிரச்சனையில் சீனுவே மாயாவிடம் இருந்து பிரித்து சாருக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் மாயா, இவங்க அனைவருக்கும் ஒன்றாக பதிலடி கொடுக்கும் விதமாக களத்தில் இறங்கி விட்டார். மாயாவுக்கு உதவி செய்யும் விதமாக எல்லா விஷயத்திலும் கை கொடுப்பதற்காக தனம் கதிர் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அந்த வகையில் ஆடுபுலி ஆட்டத்தில் புவனேஸ்வரி பத்மா பார்வதி லிங்கேஷ் என அனைவரும் தோற்றுப் போகப் போகிறார்கள். இதனை தொடர்ந்து ரகுராமுக்கும் அனைத்து உண்மைகளும் தெரிய போகிறது.