Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், கதிரும் தனமும் கோவிலில் பூஜை செய்து கோவிலுக்கு வந்தவர்களுக்கு பிரசாதம் கொடுத்தார்கள். அங்கே வந்த மாயாவும் ஜானகியும், ரகுராமுக்கு பிரசாதத்தை எடுத்துட்டு போகிறார்கள். உடனே புவனேஸ்வரி அந்த பிரசாதத்தில் விஷம் கலந்து விடுகிறார்.
இது தெரியாமல் ஜானகி வீட்டிற்கு வந்ததும் கோவில் பிரசாதம் என்று சொல்லி ரகுராமுக்கு கொடுத்து விடுகிறார். பிரசாதத்தை ரகுராம் சாப்பிட்டதும் வாயிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விட்டார். உடனே வீட்டில் இருப்பவர்கள் ரகுராமை ஆஸ்பத்திரியில் சேர்த்த பொழுது அவர் சாப்பிட்ட சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிறது என்று தெரிய வருகிறது.
ஆனால் இதற்கெல்லாம் காரணம் கதிர் தனம் தான் என்று பார்வதி பத்மாவும் மொத்த பலியையும் அவர்கள் மீது தூக்கிப் போட்டு விட்டார்கள். ஆனால் இவர்களுடைய வேலையை இதுதான் என்று மற்றவர்கள் பத்மாவையும் பார்வதியும் உதறிவிட்டு ரகுராமை காப்பாற்ற வேண்டும் என்று ஜானகி கோவிலில் பரிகாரம் பண்ண ஆரம்பித்துவிட்டார்.
இதை எல்லாம் தாண்டி ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்த ரகுராம் சரியான நிலையில் அப்பா கிட்ட போய் பார்த்து பேச முடியலை என்று ஏக்கத்துடன் தனம் ஓரமாக நின்றார். ஆனாலும் அப்பா நல்லபடியாக குணமானது சந்தோஷம் என்று சொல்லி வீட்டிற்கு கிளம்புகிறார்கள். ஆனால் ரகுராமுக்கு தெரியும் இந்த மாதிரி வேலை எல்லாம் தனம் கதிர் பண்ண மாட்டார்கள் என்று. அதனால் அவர்களை புரிந்துகொண்டு வீட்டோடு ரகுராம் சேர்த்து விடுவார்.
ரகுராம் குடும்பத்திற்கு பிரச்சினை பண்ண வேண்டும் என்று புவனேஸ்வரி போட்ட பிளான் தோற்றுப் போய்விட்டது. அதே மாதிரி பார்வதி பத்மாவும் ஆடும் ஆட்டத்துக்கும் ரகுராம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.