Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டில் பாவப்பட்ட ஜென்மமாக செந்தில் மட்டுமே இருந்தார். ஏனென்றால் கதிர் தன்னுடைய இஷ்டப்படி தான் இருப்பேன் என்று அப்பா பேச்சை கேட்காமல் இருந்து வந்தார். சரவணன் படித்து முடித்ததும் தனியாக ஒரு வேலையில் சேர்ந்து பாண்டியன் தொந்தரவிலிருந்து தப்பித்து விட்டார்.
ஆனால் செந்தில் மட்டும் பாண்டியன் கடையில் மாட்டிக்கொண்டு தினம் தினம் பாண்டியனிடம் திட்டு வாங்கி அவமானப்பட்டு நிம்மதி இல்லாமல் தவித்து வந்தார். இதையெல்லாம் சரி செய்யும் விதமாக மீனாவின் அப்பா, பணம் கொடுத்து செந்திலுக்கு அரசாங்க உத்தியோகத்தை வாங்கி கொடுத்து விட்டார். இதனால் செந்தில் இதுவரை பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் ஒரு விமோசனம் கிடைத்துவிட்டது.
இந்த சந்தோஷத்தை குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டும் என்று போன் பண்ணி எல்லோரையும் வீட்டிற்கு வரவழைத்தார். எல்லோரும் வந்த பிறகு செந்தில், அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்து கவர்மெண்ட் வேலை கிடைத்துவிட்டது என்று சொல்கிறார். இதை கேட்டதும் எல்லோரும் சந்தோஷப்பட்டு செந்திலை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.
பாண்டியனுக்கும் ரொம்பவே சந்தோஷம் என்பதற்கு ஏற்ப நம்ம வீட்டிலும் ஒரு பையன் அரசாங்க வேலையில் சேர்ந்து இருக்கிறான் என்ற கௌரவம் கிடைத்துவிட்டது. இதனால் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பார்ப்பவர்கள் அனைவரிடமும் செந்தில் கவர்ன்மென்ட் வேலை பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு கடைக்கு போன பாண்டியன், செந்திலைப் பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் ஒருவர் ஆர்டர் கொடுப்பதற்கு உங்க பையன் செந்திலுக்கு கால் பண்ணினேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று சொன்ன நிலையில் பாண்டியன் இனி அவன் கடைக்கு வர மாட்டான். அவனுக்கு அரசாங்க உத்தியோகத்தில் வேலை கிடைத்திருக்கிறது என்று பெருமையாக சொல்கிறார். அங்கே வந்த சரவணன் அப்படி என்றால் கடையை எப்படி நீங்கள் தனியாக சமாளிப்பீர்கள்.
அதனால் நான் பார்க்கும் வேலையை விட்டு விடுகிறேன், அதற்கு பதிலாக இங்கே வந்து வேலையில் சேர்ந்து கொள்கிறேன் என்று சொல்கிறார். பாண்டியனுக்கும் இது சரியான முடிவு என்பதால் சரவணன் சொன்னதுக்கு ஓகே சொல்லி விடுகிறார். அடுத்ததாக செந்தில் மீனா கதிர் ராஜி அனைவரும் மொட்டை மாடியில் இருந்து பேசி கொள்கிறார்கள்.
அப்பொழுது செந்தில், இன்னும் வேலையில் சேரவில்லை சம்பளமும் கையில் வரவில்லை. ஆனால் அதற்குள் பகல் கனவு காண்பது போல் நிலம் வாங்க வேண்டும், நகைகளும் வாங்கணும், பணத்தை சேர்த்து வைக்கணும் என்று ஓவராக பேச ஆரம்பித்து விட்டார். பிறகு கதிர் ஒரு கார் சொந்தமாக வாங்கி அதன் மூலம் அடுத்த அடுத்த கார்களை வாங்கி ஒரு டிராவல்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதற்காக லோன் வாங்கலாம் என்று முயற்சி எடுக்கிறேன் என்று கதிர் சொல்லும் பொழுது மீனா எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கார். அவரிடம் சொல்லி உனக்கு உதவ சொல்கிறேன் என சொல்கிறார். இப்படி எல்லோரும் சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் ஈசியாக ஒரு வேலை கிடைத்தது, என்றைக்கும் நிலைக்காது என்பதற்கு ஏற்ப செந்தில் வேலை விஷயத்தில் ஒரு திருப்பம் ஏற்பட போகிறது.
அதாவது குமரவேல் சக்திவேல் இதில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தி செந்திலுக்கு வேலை கிடைக்காத அளவிற்கு ஆப்பு வைக்கப் போகிறார்கள். கடைசியில் உள்ளதும் போச்சு என்று சொல்வதற்கு ஏற்ப அரசாங்க உத்தியோகமும் இல்லை, பாண்டியன் கடையில் வேலையும் இல்லை என்பதற்கு ஏற்ப சொதப்பலாக செந்தில் நிற்க போகிறார்.