Sun Tv : சன் டிவியில் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஞாயிறு கிழமை பிரைம் டைமில் படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் முதல் ஆறு மாதத்தில் அதிக ரேட்டிங் பெற்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் குறிப்பாக விஜய்யின் படங்கள் தான் அதிகம் இடம் பெற்றிருக்கிறது.
அதாவது ஆறாவது இடத்தில் விசுவாசம் படம் உள்ளது. அஜித் மற்றும் நயன்தாரா காம்போவில் வெளியான இந்த படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி இருந்தது. விசுவாசம் படம் 9.14 ரேட்டிங் பெற்றிருக்கிறது.
அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் 9.40 ரேட்டிங் பெற்று விஜய்யின் ஜில்லா மற்றும் லியோ படங்கள் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் அதிகம் பார்த்து ரசித்துள்ளனர். நான்காவது இடத்தை விஷாலின் பூஜை படம் தான் பெற்றிருக்கிறது.
சன் தொலைக்காட்சியில் அதிக ரேட்டிங் பெற்ற ஏழு படங்கள்
அதாவது 9.85 ரேட்டிங் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை விஜய்யின் ஆல் டைம் ஃபேவரைட் படமாக உள்ள கில்லி படம் தான் பிடித்திருக்கிறது. எத்தனை தடவை போட்டாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து இந்த படத்தை பார்ப்பார்கள்.
அந்த வகையில் கில்லி படம் 10.05 ரேட்டிங் பெற்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படம் தக்க வைத்திருக்கிறது. காமெடி கலந்த திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படம் 10.24 ரேட்டிங் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து முதல் இடத்தில் விஜய்யின் திருப்பாச்சி படம் தான் இருக்கிறது. அண்ணன், தங்கை சென்டிமென்ட் வைத்து ஆக்சன் படமாக வெளியான திருப்பாச்சி படம் 11. 75 ரேட்டிங் பெற்று இருக்கிறது. இவ்வாறு விஜய்யின் படங்களால் கலாநிதி மாறன் கல்லா கட்டி வருகிறார்.