கூலி படம் நாளை மறுநாள் உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. சிறப்பு காட்சிக்காக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவில் பெரிய படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிடுவதை தமிழ்நாட்டில் அரசாங்கம் சமீப காலமாக தடை செய்துள்ளது.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு கூலி படத்தின் முதல் காட்சி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 6 மணிக்கு திரையிடுகின்றனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்திய நேரப்படி காலை 4 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.
இதுவரை ரஜினிகாந்த் கூலி படத்தை முழுமையாக பார்க்கவில்லையாம். டப்பிங்கில் மற்றும் ஒரு சில காட்சிகளை பார்த்துள்ளார். நேற்று தான் முழு படத்தையும் பார்த்துள்ளார். படத்தினால் முழு திருப்தி அடைந்ததை ஒட்டி லோகேஷ் கனகராஜை வெகுவாக பாராட்டி உள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று இந்த படத்தை சன் டிவி ஆபீஸில் இருக்கும் தியேட்டரில் பார்த்துள்ளனர். அவருடன் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் குடும்பத்தினரும் கண்டு களித்துள்ளனர். குறுகிய கால இடைவேளையில் ரஜினி இரண்டாவது முறையாக சன் டிவி ஆபீசுக்கு சென்றுள்ளார்,
கலாநிதி மாறன் பயன்பாட்டுக்கு மட்டுமே இருக்கும் அந்த தியேட்டருக்கு சமீபத்தில் நண்பர்களான ரஜினி மற்றும் மோகன் பாபு சென்றுள்ளனர். மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடித்த கண்ணப்பா படத்தை அங்கேதான் பார்த்துள்ளனர் . இப்பொழுது இரண்டாவது முறையாக கூலி படத்தை ரஜினி சன் டிவி ஆபீஸில் பார்த்துள்ளார்.