Top 6 serials in TRP ratings: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகளை பெற்று டாப் 6 இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
அய்யனார் துணை: மக்களின் பேவரைட் சீரியலாக அனைவரும் பார்த்து வருகிறார்கள். எல்லோருக்கும் சமமான கேரக்டர், ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப எதார்த்தமான நடிப்பு, அதிக அளவில் நெகடிவ் காட்டாமல் பார்ப்பதற்கு ஆர்வத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தும் அளவிற்கு கதை இருப்பதால் இந்த வாரம் அய்யனார் துணை 8.12 புள்ளைகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: ரோகிணி பற்றிய மர்மமான விஷயம் எப்பொழுது தான் வெளிவரும் என்று காத்துக் கொண்டிருந்த காலங்கள் போயி இந்த சீரியல் முன்னாடி மாதிரி இல்லை கொஞ்சம் கொஞ்சமாக போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு பின் வாங்கிக் கொண்டே வருகிறது. ஆனாலும் பிரைம் டைமில் போடுவதால் 8.46 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
எதிர்நீச்சல் 2: கோமா ஸ்டேஜில் இருக்கும் ஈஸ்வரியின் நிலைமைக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்கும் விதமாக ஜனனி, குணசேகரன் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். ஆனால் குணசேகரன் இந்த கேசை அப்படியே திசை திருப்பும் விதமாக ஜனனி மீது பழி போடுவதற்கு பிளான் பண்ணிவிட்டார். அந்த வகையில் அடுத்து என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது என்று விறுவிறுப்பாக போய்க்கொண்டிருப்பதால் இந்த வாரம் 8.81 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
கயல்: இத்தனை நாளாக மூர்த்தி கேரக்டர் மர்மமாக இருந்த நிலையில் இவருக்கு நிஜ வாழ்க்கையில் பிரச்சனை இருப்பதால் இவருக்கு பதில் வேற ஒருத்தர் வந்துவிட்டார். அதனால் இனிமேலும் இழுத்தடிக்காமல் அடுத்தடுத்து கதைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் 8.88 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: வரலட்சுமி பூஜையில் நந்தினி கலந்து கொள்ள கூடாது என்று சுந்தரவல்லி என்னதான் பிளான் பண்ணினாலும் விதியை மாற்ற முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப நந்தினி வீட்டுக்கு வந்து விடுகிறார். அதனால் சூர்யா எதிர்பார்த்தபடி நந்தினி கழுத்தில் தாலி கட்டி சுந்தரவல்லியை தோற்கடிப்பார். இந்த வாரம் 9.46 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்கப் பெண்ணே: ஆனந்தி கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கும் விதமாக ஆனந்திக்கு துணையாக இருந்து அன்பு எல்லா விஷயத்திலும் கை கொடுத்து வருகிறார். ஆனால் இதுவரை அன்பு ஆனந்திக்கு சப்போர்ட் பண்ணிய துளசி தற்போது இவர்களை பிரிக்கும் விதமாக வில்லியாக மாறிவிட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 10.18 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.