சமீப காலமாக பான் இந்தியா படங்கள் அதிகமாக தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் அனைத்து மொழிகளிலும் இருந்து நல்ல ஃபேன் பேஸ் உள்ள ஆர்ட்டிஸ்ட்டுகள் கமிட் செய்யப்படுகிறார்கள். ஜெயராம், சுரேஷ் கோபி, மோகன்லால், என பல ஆர்டிஸ்ட்டுகள் தமிழுக்கு வந்து தங்களுடைய கொடிகளை பறக்க செய்தனர். அந்த வரிசையில் புதுசா களமிறங்கிய 5 சேட்டன்கள்.
பசில் ஜோசப்: 2013ஆம் ஆண்டு மலையாள சினிமா உலகில் ஒரு நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் படங்களை இயக்கவும் செய்தார். குஞ்சுராமாயணம், கோதா, மின்னல் முரளி போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவரின் திறமையை பார்த்து இவரை சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் 2,3 தமிழ் படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
சௌபின் ஜாகீர்: மஞ்சுமால் பாய்ஸ் புகழ் சௌபின் இப்பொழுது தமிழ் படங்களிலும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். முதல் படமாக ரஜினிகாந்தின் கூலியில் மரண மாஸ் காட்டியுள்ளார். ஏற்கனவே இவர் பிரேமம் , டிரான்ஸ், கிங் ஆப் கோத்தா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து பகத் பாசில் ஏற்று நடிக்கும் வில்லன் கதாபாத்திரம் இவருக்குத்தான்.
செம்பன் வினோத் : தரமான நடிகர், ஏற்கனவே இவர் கோலி சோடா இரண்டாம் பாகம் மற்றும் கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் படத்திலும் நடித்திருப்பார். போலீஸ் ஆபீஸர் கதாபாத்திரத்தில் வில்லன் சந்தானத்திற்கு சப்போர்ட் பண்ணும் கதாபாத்திரத்தில் இவரை பார்த்திருப்போம்.
ஜோஜூ ஜார்ஜ்: முரட்டு ஆளாக தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடித்து இயக்கிய பனி படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு போனது. கமலின் தக்லைஃப் படத்திலும், ஜகமே தந்திரம், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்திருந்தார்.
விது: இவரை பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் போடும் கெட்டப்புகள் அப்படி. கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் சட்டாணியாக நடித்தவர் தான் விது. இவர் ரெட்ரோ படத்தில் மைக்கேல் மிராசு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அடுத்தடுத்து 3 – 4 தமிழ் படங்கள் இவர் கையில் இருக்கிறது.