Cinema : திரையில் ரிலீஸாகும் அனைத்து படமே ஓடுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஒரு சில படங்கள் மட்டுமே பயங்கர வெற்றியை கொடுக்கும்.
ஒரு படத்தை எடுப்பதற்கு சிறிய பட்ஜெட் என்றாலும், பெரிய பட்ஜெட் என்றாலும் படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்களுக்கு நாக்கு தள்ளிவிடும். கதாநாயகன், கதாநாயகியை தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய சிக்கல்தான். ஒரு தயாரிப்பாளர் சின்ன படம் எடுக்கப் போறாங்கள் என்றால் நிச்சயம் அறிமுகம் இல்லாத ஹீரோயின் அல்லது சினிமாவில் மார்க்கெட்டில் பின் தங்கிய நடிகர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். இதனால் அவர்களின் சம்பளமும் குறைவாகத்தான் பேசப்படும்.
பெரிய படம் எடுத்தால் நிச்சயம் பிரபல நடிகர்களை வைத்து எடுக்கும் போது, சம்பளம் கட்டாயம் அதிகம் கொடுத்து தான் ஆக வேண்டும். இதுதான் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரிய தலைவலியை கொண்டு வரும். ஒரு தயாரிப்பாளர் இயக்குனர், துணை இயக்குனர் நடிகை நடிகைகளுக்கு சம்பளம் வழங்கும் கட்டாயத்தில் இருப்பான்.
சம்பளத்தை உயர்த்துவது சரியா..?
தற்போது நடிகர்களின் அதிக சம்பளத்தை பற்றி வலைத்தள விமர்சகர் தனஞ்செயன் பேசியுள்ளார்.
சிவாஜி, ரஜினி, கமல் இவர்கள் எல்லாருமே ஒரு காலகட்டத்தில் சினிமாவில் குறைவாகவே சம்பளம் வாங்கியுள்ளனர். ஆனால் இப்போது ஒரு படம் ஹிட்டானாலே போதும் அடுத்த படத்திற்கு 200 சதவீதம் சம்பளத்தை ஏத்தி கேட்கின்றனர். இது தயாரிப்பாளர்களுக்கு மிகவும் மன உளைச்சலை கொடுக்கும்.
ஒரு படத்தில் நடித்துவிட்டு இன்னொரு படத்திற்கு 10 சதவீதம் கேட்டால் பரவாயில்லை 200% என்பது அதிகம் தான். நீங்கள் நடிக்கும் படத்தை சேட்டிலைட் அல்லது ஓடிடி நிறுவனம் வாங்கினாலும், பெரிய பட்ஜெட்டில் வாங்குவார்கள் என்று கேரண்டி சொல்ல முடியாது.
தயாரிப்பாளர்கள் எடுக்கும் படத்தில் எவ்வளவு லாபம் வருமோ அதிலிருந்து குறைந்தளவு சம்பளம் வாங்குவது தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டி கொடுக்கும்- தனஞ்செயன்