Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணனும் அரசியும் வீட்டுக்குள் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து தங்கமயில் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கவனிக்கும் வகையில் அங்கேயும் இங்கேயும் போயிட்டு இருக்கிறார். உடனே அரசி, எதுக்கு நீ இப்படி போறீங்க. நானும் அண்ணனும் சும்மா தான் பேசிக்கிட்டு இருக்கோம்.
நீங்களும் இங்கே வாங்க, வந்து உட்காருங்க என்ன சொல்கிறார். அதற்கு தங்கமயில் எனக்கு அடுப்பங்கரையில வேலை இருக்கிறது என்று சொல்லி கோமதிக்கு உதவி பண்ண போய் விடுகிறார். ஆனாலும் அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் சரவணன் அரசி பேசுவதை எட்டிப் பார்க்கிறார். இதை பார்த்த அரசி, நானும் அண்ணனும் பேசுறது உங்களுக்கு கோபமாக இருக்கிறதா என்று கேட்கிறார்.
அதற்கு தங்கமயில் எனக்கு என்ன கோபம், அண்ணன் தங்கச்சி பேசுறீங்க இதுல நான் கோபப்படறதுக்கு என்ன இருக்கு என்று சொல்கிறார். அந்த நேரத்தில் பாண்டியன் கடை வெளியே முடித்துவிட்டு ஸ்வீட் வாங்கிட்டு வருகிறார். வந்ததும் கோமதி மீனா ராஜி அனைவரையும் கூப்பிடுகிறார். அப்பொழுது கதிர் செந்தில் வந்து விடுகிறார்கள். உடனே எல்லோரும் ஸ்வீட் சாப்பிடுகிறார்கள்.
அடுத்ததாக மீனா ராஜியை பாராட்டும் வகையில் பேசிவிட்டு ராஜி ஐஏஎஸ் ஆவதற்கு பாண்டியன் சப்போர்ட் பண்ணும் விதமாக நம்பிக்கையுடன் பேசுகிறார். உடனே அரசிடம், நீ இந்த வீட்டில் இருக்கும் மீனா ராஜியை உதாரணமாக எடுத்துக்கோ, நல்லபடியாக படிச்சு ஒரு சிறந்த வேலையில் இருக்கிறார்கள். அதே மாதிரி நீயும் வரவேண்டும் என்று சொல்கிறார்.
இதை கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாத தங்கமயில், எல்லோரும் சாப்பிடலாம் என்று பேச்சே மாத்துகிறார். அடுத்ததாக தங்கமயில் ரூமுக்குள் வந்து எதற்கெடுத்தாலும் மீனா ராஜி என்று பாராட்டி கொண்டே இருந்தால் எப்படி. விழுந்து விழுந்து வீட்டு விலையை பார்ப்பது நானு, அப்படி என்றால் மயிலு மாதிரி நல்ல பொறுப்பா வீட்டு வேலையை பார்க்கணும். கல்யாணம் முடிஞ்சு குழந்தையை பெற்றுக் கொள்ளும் என்று சொல்லி இருக்கலாம் என புலம்புகிறார்.
அதனால் எல்லோருடைய கவனம் நம் பக்கத்தில் திரும்ப வேண்டும். முக்கியமாக நம் வீட்டுக்காரர் நம்முடைய கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்பதற்காக கால் வலிப்பது போல் டிராமா போட்டு எல்லோரையும் நம்ப வைத்து விட்டார். பிறகு சரவணன் கால் படித்து விடும் அளவிற்கு தங்கமயில் சரவணன் அடிமையாக்கி விட்டார். அடுத்ததாக ராஜி, கதிர் பிசினஸ்க்காக நான் நடை விற்க போகிற விஷயத்தை மீனாவிடம் சொல்லிவிடுகிறார்.
அந்த வகையில் ராஜி, நகை எடுத்துட்டு விற்கும் பொழுது சக்திவேல் அதை பார்த்து விடுவதால் இதை வைத்து பிரச்சினை பண்ண போகிறார். இந்த பிரச்சினை சமாளிப்பதற்காக ராஜி கதிர் நடந்த கல்யாண விஷயம் ஒளிபரப் போகிறது.