பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக தனுஷின் இட்லி கடை படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஏகப்பட்ட ஆர்டிஸ்ட்டுகள் அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி கஷ்டப்பட்டு முடித்திருக்கிறார் தனுஷ்.
இந்த படத்தின் சூட்டிங் பேங்க்காக்கில் நடைபெற்றது. எல்லா ஆர்ட்டிஸ்ட்களையும் ஒருசேர அங்கே வைத்து எடுப்பதில் நிறைய சிரமப்பட்டார். திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷ் நித்யா மேனன் உடன் இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அருண் விஜய் வில்லன் கதாபாத்திரம் நடித்திருக்கிறார்.
முன்னாடியே ரிலீஸ் ஆகக்கூடிய இந்த படம் பல பிரச்சனைகளை தாண்டி கடைசியாக அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ED ரெய்டில் மாட்டிக்கொண்டதால் பெரும் போராட்டத்திற்கு பின் வெளியிடுகிறார்கள். ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லீ உடன் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்பொழுது இந்த படத்திற்கு போட்டியாக சூப்பர் ஹிட் கன்னட படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. 2022ஆண்டு ரிசப் செட்டி நடித்து இயக்கிய காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் 2ஆம் தேதி வெளிவர உள்ளது. இந்த தேதியை தான் படக்குழுவினரும் பைனல் பண்ணியுள்ளனர்.
இரு படங்களின் ரிலீஸ் தேதியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சரியான போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் சமமான திரையரங்குகள் இதற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பட்டையை கிளப்பிய காந்தாரா படத்தால் இதன் இரண்டாம் பாகத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.