Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. சன் டிவியில் நெடுந்தொடராக தற்போது கயல் சீரியல்தான் இடம் பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எழில் மற்றும் கயலின் கதாபாத்திரங்கள் மக்களை கவர்ந்ததால் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. அதனால் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
இதில் இன்னொரு பிளஸ் பாயிண்ட் கயல் மற்றும் மூர்த்தியின் கதாபாத்திரம். அண்ணன் தங்கையின் பாசத்தை காட்டும் விதமாக பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட மூர்த்தி கேரக்டர் கடந்த சில வாரங்களாக சீரியலில் காண்பிக்கப்படவில்லை. அதனால் மூர்த்தி வருவாரா வரமாட்டாரா என்ற கேள்வி தற்போது எழும்பி இருக்கிறது.
அந்த வகையில் அது பற்றி கிடைத்த தகவலை பற்றி தற்போது பார்க்கலாம். அதாவது மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஐயப்பன். இவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் கயல் சீரியலில் மூர்த்தி கேரக்டர் மூலம் பிரபலமாகி இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சில மாதங்களுக்கு முன் சூட்டிங் இடத்திற்கே வந்து இவருடைய மனைவி பிந்தியா பிரச்சினை செய்ததால் சோசியல் மீடியாவில் பலரும் பேசும்படியாக அமைந்தது.
அதாவது பிந்தியா ஐயப்பன் மீது கொடுத்த புகார் என்னவென்றால் எந்த நேரமும் போ**தையிலேயே இருப்பதாகவும், அதனால் அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். முக்கியமாக கயல் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் அவருடைய கேரக்டரும் சேஞ்ச் ஆகி எங்களுடைய வாழ்க்கையில் பிரச்சனை மேல் பிரச்சனை வந்தது என்றும் கூறியிருந்தார்.
இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் பெரிய கலவரம் ஆகி சர்ச்சையில் மூர்த்தி என்கிற ஐயப்பன் பெயர் மிகவும் அடிபட்டது. இதனை தொடர்ந்து தற்போது இவருடைய கேரக்டரை சீரியலில் பார்க்க முடியவில்லை. அதாவது இவருக்கு பதிலாக இவர் என்று வேறு ஒருவரை கொண்டு வரவும் இல்லை. இவருடைய கேரக்டரை அப்படியே தூக்கவும் இல்லை, அதற்கு பதிலாக மூர்த்தி வெளியூர் போயிருப்பது போல காட்டி வருகிறார்கள்.
இது சம்பந்தமாக வெளிவந்த தகவல் என்னவென்றால் சன் டிவி பொருத்தவரை சீரியல் நடிக்கின்ற ஒரு நபர் தனிப்பட்ட காரணங்களுக்காக சர்ச்சையில் சிக்கி இருந்தால் அவர்களுடைய பிரச்சினையை தீர்த்து விட்டு வந்த பிறகுதான் சீரியலில் தொடர முடியும் என்றுதான் கண்டிஷன். அதனால் அய்யப்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்துவிட்டு அவர் தொடர்வார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்பொழுது வரை ஐயப்பனுக்கும் அவருடைய மனைவி பிரிந்தாவுக்கும் எந்தவித சமரச பேச்சுக்களும் ஏற்படாததால் இன்னும் பிரச்சனை போய்க்கொண்டிருப்பது போல் நண்பர்கள் வட்டாரத்தில் கூறியிருக்கிறார்கள். அதனால் சன் டிவி சேனல் இன்னும் கொஞ்ச நாட்கள் மூர்த்திக்காக காத்துக் கொண்டிருக்கும். அதற்குள் அவர் வரவில்லை என்றால் அவருக்கு பதில் இன்னொருவர் கொண்டு வருவதாக சன் டிவி சேனல் முடிவெடுத்து இருக்கிறது.