விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த பிரபலங்கள் பலரும் இருக்கையில் இதில் ஒருவராக இருப்பவர்தான் kpy பாலா. அப்படித்தான் இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி காமெடிகளை தெறிக்க விடும் விதமாக கவுண்டர்கள் கொடுத்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் கில்லாடியாக பெயர் வாங்கி இருக்கிறார். அதனால் ரசிகர்களிடம் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறார்.
ஆனால் எத்தனையோ காமெடி நடிகர்கள் எக்கச்சக்கமான திறமைகளை வைத்திருந்து வாய்ப்புக்காக அலைமோதும் சமயத்தில் kpy பாலா மட்டும் இந்த அளவுக்கு பிரபலமானதிற்கு முக்கிய காரணம். தான் உண்டு தான் வேலை உண்டு என்று இல்லாமல் தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக உதவி செய்ய வேண்டும் என்று நினைத்ததால் என்னமோ ரசிகர்களிடம் நீங்காத ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
வாரி வழங்கும் kpy பாலா
அந்த வகையில் தற்போது ஏழை மக்களின் நம்பிக்கை வெளிச்சமாக திகழ்ந்து வருகிறார். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போது இவரைப் பற்றி ஒரு சர்ச்சை பூதாகரமாக வெடித்து வருகிறது. அதாவது நடிப்பில் மட்டும் இருக்கும் பொழுது kpy பாலா பற்றி தெரியுமோ தெரியவில்லையோ, ஆனால் எப்பொழுது ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இறங்கினாரோ, அப்பொழுதே சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிவிட்டார்.

சர்ச்சையான விஷயம்
ஆனால் இந்த சமயத்தில் இவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பிய நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி என்பவர் கொடுத்த பேட்டி அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது இந்த தேசத்திற்கும் மாநிலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை வருங்காலத்தில் வைக்கக்கூடிய நபர் யார் என்றால் kpy பாலா தான் என்று சொல்லி இருக்கிறார்.
ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும் சமயத்தில் வாங்கின பணத்தை எல்லாம் அயன் பாக்ஸ், சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, வீடுகட்டி தருவது, ஆம்புலன்ஸ் கொடுப்பது போன்ற வேலைகள் எல்லாம் செய்வதை பார்க்கும் பொழுது பித்தலாட்டமாக தான் இருக்கிறது.
சர்வதேச பிரச்சனையாக மாறிய பூகம்பம்
ஆனால் இவர் இப்படி செய்வது சர்வதேச அளவில் பிரச்சினையை தரக்கூடியதாக இருக்கப் போகிறது என்றும் சொல்லியிருக்கிறார். அதாவது அரசாங்கம் மக்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் முழுசாக போய் சேருவதில்லை. அப்படியே சேர்ந்தாலும் அது பெருசாக சொல்லப்படுவதில்லை.
ஆனால் இவர் மட்டும் செய்யும் விஷயங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி மக்கள் இவரை தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு பேசப்படுகிறது என்றால் இதற்கு பின்னணியில் இருக்கும் பயங்கரமான விஷயத்தை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இதெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக செண்டிமெண்டாக தாக்கப்படுகிறது.
குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு அதிகமாக சேவை செய்வது என்றால் எப்படி சாத்தியமாக முடியும். ஆரம்பத்தில் நல்லவராக இருந்தாலும் போகப்போக இவரை மாற்றிய தீய சக்திகள் தான் அதிகம். நாலு பேருக்கு நல்லது செஞ்சுட்டு மொத்த நாட்டையும் பாழாக்கும் வகையில் இருக்கிறது.
சென்டிமென்டாக தாக்கும் kpy பாலா
அத்துடன் அவருடைய பேச்சும் சென்டிமென்ட் ஆகவும் பெண்களை கவரும் வகையில் இருக்கிறது. மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவருக்கு ஏன் கூடவே பவுன்சரும் பாக்சரும் வர வேண்டும், எல்லாமே செட்டப் தான் என்று kpy பாலா மீது சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறார். இவருடைய நல்ல மனசுக்கு ஏதாவது ஒரு அரசியலில் சேர்ந்து மக்களுக்கு நல்லது செஞ்சால் சந்தோஷம்தான்.
கைக்கூலியாக இருக்கிறாரா?
ஆனால் அதை விட்டு தீய சக்திகளுடன் கூட்டணி வைத்து கைக்கூலியாக இருந்து ஏழைகளை வைத்து புரட்சியை உருவாக்கி அதன் மூலம் இந்தியாவில் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. எனவே தமிழக அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி என்பவர் பேட்டி கொடுத்திருக்கிறார்.
ஆனால் என்னதான் இவர் சொன்னாலும் இதற்கு ஆதாரம் இருந்தால் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கலாம், சும்மா வாய் வழியாக சொல்லி ஒருவருடைய கேரியரையும் கேரக்டரையும் டேமேஜ் பண்ணுவது முறையாக இருக்காது.