Nithya menon : தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து, தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிய நடிகை நித்யா மேனன்.
மலையாள நடிகையான இவர் 180 என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்பு ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்தார். பின்பு தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு ஓஹோனு வரவேற்பு கிடைத்தது.
மீண்டும் தனுஷூடன்..
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்து விருது வாங்கினார் நித்யாமேனன். அதன்பின் தனுஷ் இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பில் தற்போது இட்லி கடை திரைப்படத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். மீண்டும் நித்யா மேனன் மற்றும் தனுஷின் காம்போ நல்லா வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை சாணி அள்ளுவதா..?
தற்போது நித்யா மேனன் இட்லி கடை திரைப்படத்தை பற்றி பேட்டி அளித்திருக்கிறார். அதனுடன் ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றியும் கூறியிருக்கிறார்.
” ஒரு நடிகையாக இருந்தாலும், நான் இட்லி கடை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, எனக்கு அடுத்த நாள் தேசிய விருது வழங்க இருந்தார்கள். அதற்கு முந்தின நாள் இட்லி கடை பட சூட்டிங்கில் வெறும் கையால் சாணி அள்ளினேன். தேசிய விருதை பெரும்போது அந்த சாணி என் விரல் நகங்களில் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது”.
ஒரு நடிகையாக இருந்து கொண்டு தேசிய விருது வாங்குவதற்கு முன்னாடி சாணி அள்ளினேன் என்று கூறுவதெல்லாம் சரியா? தன் தேசிய விருது கொச்சைப்படுத்தற மாதிரி பேசி விட்டீர்களே? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.