அஜித்தின் அடுத்த படம் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அதன்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்று கூறினார்கள் இப்பொழுது அவர் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து பின்வாங்கி விட்டாராம். இதற்குப் பின்னால் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது, முக்கியமா அஜித் நிறைய கண்டிஷன்கள் போட்டு வருகிறாராம்.
அஜித்தின் சம்பளம் 180 கோடிகள். ஆரம்பத்தில் ஒரு பெரிய தொகையை வாங்கிக் கொண்டு மீதமுள்ளவற்றை ஒவ்வொரு மாதமும் 5 கோடிகளாக தனக்கு கொடுக்குமாறு கேட்பதுதான் அஜித் வழக்கம். ஆனால் இம்முறை புதுப்புது ரூல்ஸ் போட்டு அதிர வைத்துள்ளார் ஏகே.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பு 50 சதவீதம் அட்வான்ஸ் வாங்கிக் கொள்வார் அஜித். அதன் பின் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும். இந்த நடைமுறையை இப்பொழுது புதிதாக மாற்றிவிட்டார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சம்பளத்தில் பெரும் தொகையை ஆரம்பத்தில் வாங்கி விடுவாராம், அதன் பின்னர் மீது உள்ள தொகையை போஸ்ட்டேட் செக் போட்டு அஜித்திடம் கொடுத்து விட வேண்டுமாம். இதனால் தான் இப்பொழுது பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித் இப்படி செய்வதால் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அப்செட்டில் இருக்கிறார். பொதுவா சூட்டிங் முடிந்த பிறகு டப்பிங் பேசும்போது தான் ஹீரோக்களுக்கு முழு சம்பளமும் கொடுக்கப்படும். ஆனால் அஜித் இப்படி உல்டாவாக கேட்கிறார். இதனால் ஆதிக், தனது உறவினரான சிவாஜி ப்ரொடக்ஷன்சை நாடக்கூடும் என தெரிகிறது.