Vijay : விஜய் தமிழக வெற்றிக் கழக கட்சியை தொடங்கியுள்ள நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். விஜய்க்கு கட்சி தொடங்கியதில் இருந்தே தற்போது வரை உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து வருபவர் புஸ்ஸி ஆனந்த்.
இவர் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டு செய்யும் விஷயங்கள் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ஒருபுறம் விஜய்யை பெரிய அரசியல் தலைவர்களை சந்திக்க வைக்கும் அளவுக்கு இவருக்கு செல்வாக்கும் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறுகின்றார்கள். இந்த சூழலில் நேற்றைய தினம் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
விஜய்யை ஓவர்டேக் செய்த புஸ்ஸி ஆனந்த்
இதற்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் கவிதை கொட்ட வசனங்களை கூறி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனந்த் என்றால் அன்பு, ஆனந்த் என்றால் அரவணைப்பு, ஆனந்த் என்றால் தியாகம், உழைப்பிற்கு உருவம் உண்டெனில் அது அண்ணன் புஸ்ஸி ஆனந்த் தான் என உணர்ச்சி பொங்க வாழ்த்தி இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் போன மாதம் விஜய்யின் பிறந்த நாளுக்கு கூட இப்படி எல்லாம் வாழ்த்து போடலையே, எதுக்கு இவ்வளவு ஓவர் ஆக்டிங் பண்றீங்க, சத்தியமா இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று நக்கல் அடித்து இருக்கிறார். மேலும் ஒருவர் சாமியே சைக்கிள்ல போகும்போது பூசாரிக்கும் புல்லட் கேட்கிறதா என்று பதிவிட்டு இருக்கிறார்.
இன்னும் சிலர் மோடியை விட அண்ணாமலையை பற்றி அதிகமாக புகழ்கிறார்கள். அப்படிதான் விஜய் விட புஸ்ஸி ஆனந்தை கொண்டாடுகிறார்கள் என்று கூறுகின்றனர். மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முழு வீச்சில் தமிழக வெற்றிக் கழகம் இறங்கி இருக்கிறது.