Sai Abhyankar : சாய் அபயங்கர் தமிழ் சினிமாவில் புதிதாக இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவர் முதலாவதாக லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் ஒப்பந்தமானார். அவருடைய ஒரு படம் கூட தற்போது வரை வெளியாகவில்லை.
ஆனால் அதற்குள்ளாகவே அடுத்தடுத்து 8 படங்களில் கமிட் ஆகிவிட்டார். அதுவும் குறிப்பாக பெரிய பட்ஜெட் படங்கள் தான். சூர்யாவின் கருப்பு மற்றும் அட்லீ, அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படம் ஆகியவற்றிற்கு சாய் இசையமைக்கிறார்.
சமீபத்தில் சாம் சிஎஸ் நிறைய படங்களில் இசையமைத்து வந்தார். ஆனால் அவருக்கு பெரிய நடிகர்களின் வாய்ப்பு தற்போது வரை எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் சாய் அபயங்களுக்கு மட்டும் எப்படி பெரிய நடிகர்களின் வாய்ப்பு கிடைத்தது என்ற கேள்விக்குறி உள்ளது.
சாய் அபயங்கருக்கு பட வாய்ப்பு குவிய காரணம்
அதாவது சாய் அபயங்கார் பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசு. சினிமாவில் நிப்போட்டிசம் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுவே சினிமாவில் திறமை இருந்தும் வாரிசு பிரபலங்களால் பலர் வளரவும் முடியாமல் இருப்பதாக கருத்து வருகிறது.
ஆனால் சினிமாவில் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோருக்கே பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படி இருக்கையில் அவர்களது மகனுக்கு வாய்ப்பு கிடைக்க இது காரணமாக இருக்காது என்ற கூறப்படுகிறது.
மேலும் ஒருவருக்கு திறமை இல்லாமல் லோகேஷ், அட்லீ, சூர்யா, கார்த்தி போன்றவர்கள் படம் கொடுக்க மாட்டார்கள். கண்டிப்பாக சாய் அபயங்கர் ஆல்பம் பாடல்கள் போன்றவற்றை பார்த்ததால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
என்னதான் வாரிசு பிரபலங்களாக இருந்தால் அவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்தாலும் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்பது நிதர்சனம். அனிருத் போன்று சாய் மிகப்பெரிய வளர்ச்சி பெறுகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.