SAM CS : பிரபல இசையமைப்பாளர் சாம் cs சில நாட்களுக்கு முன் அளித்த நேர்காணல் ஒன்றில் “மஹாவதார் நரசிம்மா” என்ற படத்தை பற்றி பேசியிருப்பார். அதாவது இந்த படத்தை யாரும் மதிக்கல, பெருசா பிரபலப்படுத்தல, யாருமே கண்டுக்கல என கூறியிருப்பார்.
ஆனால் இந்த படம் அதற்கான அங்கீகாரத்தை அதுவே பெற்றுக்கொள்ளும். படம் ரிலீஸ் ஆனதிற்கு அப்புறம் பாருங்க! இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்க போகுது. மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைக்க போகுது என கூறியிருப்பார்.
சாம் CS சொன்னது போலவே நடந்துட்டு..
அன்று அவர் சொன்னது போலத்தான் இன்று நடந்து வருகிறது. “மஹாவதார் நரசிம்மா” படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகி குறைந்த நாளிலே மிகப்பெரிய வசூலை பெற்றுருக்கிறது.
எல்லாம் ஓகே தான் ஆனால் இந்த படத்தோட பட்ஜெட் வெறும் 4 கோடிதானாம். குறைந்த பட்ஜெட்ல எடுத்து, இதுவரை 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது இந்த படம். படத்துல சும்மா மிரட்டி விட்ருக்காங்களாம் சீன்லாம். வாய்ப்பே இல்லை, செம படம் என்ற பெயரையும் சம்பாதிச்சுருக்கு.
இந்த ஒரு அவதாரத்திக்கே இப்படின்னா! இன்னும் 9 அவதாரத்திற்க்கு என்னல்லாம் சம்பவம் செய்யபோகுதோ! என வியந்து போய் இருக்கிறதாம் சினிமா உலகம். சாம் cs சொன்னது போலவே இன்னைக்கு “மஹாவதார் நரசிம்மா” அதற்கான அடையாளத்தை உருவாக்கிகொண்டது என பேசிக்கொள்கிறார்களாம்.
நல்ல கதைக்கும், நல்ல படத்திற்கும் என்னைக்குமே மார்க்கெட்டிங் தேவையில்லை. அதற்கான இடத்தை அது அடைந்து விடும் என ஜாடையாக பேசிக்கொள்கிரர்களாம். மார்க்கெட்டிங் என நினைத்து காசை கரியாக்காமல், நல்ல கதையை வைத்து படம் எடுங்க என சொல்கிறார்களாம் திரை பிரபலங்கள்.