Sai Abhayankar: பிள்ளை பெறுவதற்கு முன்பே பெயர் வைக்கிறது என்று சொல்வார்கள். அப்படித்தான் என்னவோ தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத சாய் அபயங்கர் பற்றிய வைரல் செய்திகளும்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கட்சி சேர என்ற ஒரு பாட்டை வெளியிட்டு அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ், சூர்யாவின் 45 ஆவது படத்தில் இசையமைப்பாளராக இருக்கிறார் சாய் அபயங்கர்.
இணைய கூலிகள்
சாய் அபயங்கர் 90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தங்கள் குரலில் கட்டி வைத்திருந்த திப்பு ஹரிணி தம்பதியின் மகன். ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாமலேயே அடுத்தடுத்து 10 படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
அதே நேரத்தில் சாய் அபயங்கருக்கு நிறைய இன்புளுயன்ஸ் இருக்கிறது, இவரைப் போன்ற ஆட்களால் ஷாம் சி எஸ் போன்றவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் செய்திகள். ஒருவர் வளர்ந்து கொண்டிருக்கும்போது அவரை வீழ்த்த இது போன்ற செய்திகள் வரலாம்.
ஆனால் சாய் அபயங்கர் வளர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் இது போன்ற செய்திகள் வெளியாவது ஆச்சரியம் தான். இதற்காக இணையத்தில் மும்முரமாக வேலை நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து ஷாம் சி எஸ் பேசுகையில் சாய் அபயங்கர் ஒரு நல்ல திறமையாளர்.
ஒரு சிலர் அவரைக் குறித்து நான் தான் நெகட்டிவ் விஷயங்களை பரப்புகிறேனா என்று கேட்கிறார்கள். யாராவது ஒருவர் அதை நிரூபித்தால் கூட நான் சினிமாவை விட்டே விலகி விடுவேன் என்று பேட்டி அளித்திருக்கிறார்.
அதே நேரத்தில் தமிழ் சினிமாவை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் அனிருத் தான் இந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின்னணியில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
எது எப்படியோ மக்களின் மனதிற்கு ஒரு விஷயம் பிடித்து போய்விட்டால் எத்தனை நெகட்டிவ் PR கள் வேலை செய்தாலும் தவிடு பொடியாகிவிடும் என்பது தான் நிதர்சனமான உண்மை.