இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அனுமதித்தது. தற்போது வரை உணவு இடைவெளியின் போது இந்திய அணி 98/2 என்ற நிலையில் இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தேர்வு சற்று வித்தியாசமாக இருக்கிறது. தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சனுக்கு இந்த போட்டியில் ஆட இடமில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாய் 30 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு ஏன் உட்கார வைத்து விட்டார்கள் என தெரியவில்லை.
மூன்றாவது வரிசையில் ஆடி வந்தார் சாய் சுதர்சன். இப்பொழுது அந்த இடத்தில் கருண் நாயரை களம் இறக்கி உள்ளனர். அவரும் 31 ரண்களில் ஆட்டம் இழந்துவிட்டார். இப்படி போதிய வாய்ப்பு கொடுக்காமல் ஒரு போட்டியில் ஆட வைத்து சோதித்துப் பார்க்கிறார்கள். இது அவருடைய மனநிலையை பாதிக்கும்.
முதல் போட்டியில் ஆடிய மூன்று வீரர்களை இதில் மாற்றியுள்ளனர். நட்சத்திர வீரர் பும்ராவிற்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் விளையாடுகிறார். மற்றொரு மாற்றமாக சார்துல் தாக்கூரை நீக்கிவிட்டு தமிழ்நாட்ட வீரர் வாஷிங்டன் சுந்தரை சேர்த்துள்ளனர். மூன்றாவது மாற்றமாக நிதீஷ் குமார் ரெட்டி சாய் சுதர்சனுக்கு பதிலாக இந்த போட்டியில் ஆடுகிறார்.
பும்ரா இல்லாத இந்திய அணி இங்கிலாந்து அணியினருக்கு வரப்பிரசாதம் போல். ஏற்கனவே அவர்கள் நாங்கள் இந்தியாவை ஒயிட் வாஸ் செய்வோம் என வாய்ச்சவடால் விட்டு வருகிறார்கள். இப்படி பௌலிங்கில் வலு சேர்க்காமல் இங்கிலாந்து அணியை வெல்வது கடினம் என முன்னால் வீரர்கள் கூறி வருகிறார்கள்.