Mahanadhi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய்யின் பாட்டி காவேரி வீட்டிற்கு சென்று விவாகரத்து நோட்டீசை கொடுத்து இதில் கையெழுத்து போட்டு கொடு என்று வற்புறுத்தி கேட்கிறார். முக்கியமாக இதில் விஜய்க்கும் சம்மதம் தான் என்று சொல்லி காவேரி இடம் கேட்கிறார். இதனால் அதிர்ச்சியான காவிரி என்ன பண்ணுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார்.
உடனே குமரன் மற்றும் பாட்டி இருவரும் சேர்ந்து இப்பொழுது தானே இதை கொடுத்து இருக்கீங்க. கொஞ்சம் அவகாசம் கொடுங்க யோசித்து காவிரி முடிவெடுப்பால் என்று சொல்லியதால் பாட்டியும் சித்தியும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். இதைப் பற்றி யோசித்த காவேரி, நிச்சயம் விஜய் இந்த விவாகரத்து நோட்டீசை கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறார்.
அதனால் விஜய் இடம் கேட்கலாம் என்று விஜய்க்கு போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் விஜய் காரில் போய்க்கொண்டிருப்பதால் காவேரி போன் பண்ணுவதை கவனிக்கவில்லை. இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் காவிரி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் சாரதா என்னிடம் ஒரு மாதிரியும் விஜய் இடம் வேற மாதிரியும் நீ நடந்து கொள்கிறாய்.
நான் சொல்லியும் நீ இந்த அளவுக்கு நடந்து கொள்கிறாய் என்றால் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்ன என்று கேட்கிறார். அதற்கு காவிரி, ஆமாம் ஒரு உண்மையை மறைத்திருக்கிறேன் என்று சொல்லிய பொழுது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சாரதா மற்றும் குடும்பத்தின் முன் காவேரி சொல்லி விடுகிறார்.
இதைக் கேட்டு சாரதா அதிர்ச்சியாகி இனி காவிரிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக விஜய்யுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி காவிரி விஜய்யை சேர்த்து வைக்கப் போகிறார். இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பதற்கு ஏற்ப விஜய்க்கு இனி எந்த பிரச்சினையும் இல்லாமல் ஒரு விமோசனம் கிடைத்துவிடும்.
மேலும் இந்த விஷயம் பாட்டிக்கும் தெரிந்த நிலையில் பாட்டியும் காவிரியை ஏற்றுக்கொள்வார். அதன் பின் விஜய் மற்றும் காவிரி இருவரும் சேர்ந்து பசுபதிக்கு முடிவு கட்டுவார்கள்.