Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், இத்தனை நாளாக இந்த ஒரு தருணத்திற்கு தான் காத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப காவிரி கர்ப்பமான விஷயம் வெளிவந்துவிட்டது. அதாவது விஜயின் பாட்டியும் சித்தியும் காவிரி வீட்டிற்கு சென்று சாரதாவையும் காவிரியும் அவமானப்படுத்தி பேசியதால் சாரதா கடுப்பாகிவிட்டார்.
உடனே காவிரியை பார்த்து இவ்வளவு தூரம் பேசிய பிறகும் நீ ஏன் இவ்ளோ பிடிவாதமாக இருக்கிறாய். பொதுவா உன்னை யாராவது சின்னதா சீண்டினாலே நீ அவங்களை சும்மா விடமாட்ட, அப்படி இருக்கும்பொழுது விஜய் விஷயத்தில் எல்லோரும் உன்னை அசிங்கப்படுத்தி பேசிய பொழுதும் அமைதியாய் இருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.
என்னவென்று சொல்லு என கேட்கிறார் சாரதா, காவிரியிடம் கேட்கிறார். அதற்கு காவிரி வழக்கம் போல் சமாளிக்க பார்த்தார். ஆனால் சாரதா பிடிவாதமாக கேள்வி கேட்டதால் கடைசியில் காவிரி உண்மையை சொல்லும் படி நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சாரதாவிடம் சொல்லி விடுகிறார். இதனால் அதிர்ச்சியான சாரதா இதை ஏன் சொல்லாமல் மறைத்தாய் என்று கேட்கிறார்.
பிறகு கங்கா காவிரியிடம் நீ இதனால் தான் மாத்திரை எல்லாம் எடுத்து சாப்பிட்டியா, ஏன் என்னிடமும் சொல்லலை என்று திட்ட ஆரம்பிக்கிறா.ர் பிறகு சாரதா நான் அந்த விஜய் இடம் பேச வேண்டும், அவரை வரச்சொல்லு என சொல்கிறார். உடனே சந்தோஷப்பட்ட காவேரி விஜய்க்கு ஃபோன் பண்ணி பார்க்கிறார். ஆனால் விஜய் போன் எடுக்கவில்லை என்றதும் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கிறார்.
மாநான் கர்ப்பமான விஷயத்தை அம்மாவிடம் சொல்லிவிட்டேன், அம்மா உங்களை பார்த்து பேச வேண்டும் என்று சொல்கிறார். நீங்கள் வீட்டுக்கு வாங்க என கூப்பிடுகிறார். அந்த மெசேஜை விஜய் கேட்டதும் சந்தோஷப்பட்டு வீட்டிற்கு வருகிறார். வரும் வழியில் குமரன் மற்றும் நவீன், விஜயின் பாட்டியும் சித்தியும் பேசின விஷயத்தையும் விவாகரத்து கேட்டதையும் சொல்லிவிடுகிறார்கள்.
இதனால் கோவப்பட்ட விஜய் நேரடியாக வீட்டிற்கு சென்று பாட்டியை திட்டுகிறார். அப்பொழுது பாட்டி நான் எது பண்ணாலும் உன் நல்லதுக்கு தான் பண்ணுவேன் என்று சொல்லி விவாகரத்து பத்திரத்தை கொடுத்து கையெழுத்து கேட்கிறார். உடனே கோவப்பட்ட விஜய் அந்த பத்திரத்தை கிழித்திருந்து விட்டு காவிரி கர்ப்பமான விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதன் பின் சாரதா, விஜய்யிடம் பேசி காவிரியும் விஜய்யும் சேர்த்து வைத்து விடுவார்.