Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் அடுத்த வாரம் மிகப்பெரிய திருப்புமுனையை நோக்கி நகர இருக்கிறது. தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து விட்டு எப்படியாவது அக்கா கோகிலாவின் திருமணத்தை நடத்த ஆனந்தி முடிவெடுக்கிறாள்.
அதுமட்டுமில்லாமல் அன்புவின் வாழ்க்கையை விட்டு விலகி விடுவதாகவும், இனி சென்னை பக்கமே வரமாட்டேன் எனவும் யாழினி இடம் வாக்கு கொடுத்து இருக்கிறாள். செவரகோட்டையில் இருக்கும் ஆனந்திக்கு அடுத்து மிகப்பெரிய சிக்கல் ஏற்படப்போகிறது.
நகரத்தில் இருக்கும் வரைக்கும் ஆனந்திக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் கிராமத்தில் இருப்பவர்கள் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை அறிகுறிகள் மூலம் கண்டுபிடிப்பது போல் அடுத்த கதை நகரும்.
அதே நேரத்தில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணமாக இருக்கும் மகேஷுக்கு இன்னொரு சிக்கல் ஏற்பட போகிறது. ஆனந்தி கிராமத்துக்கு போன நேரத்தை பயன்படுத்தி மித்ரா மகேஷ் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள்.
மகேஷ் அம்மா பார்வதி உதவியுடன் திருமண ஏற்பாடுகள் அவசர அவசரமாக நடக்கப்போகிறது. இதையெல்லாம் தாண்டி ஆனந்தி கர்ப்பத்தின் காரணமாக மகேசுடன் சேருகிறாளா அல்லது அன்புடன் சேருவதற்கு வாய்ப்புகள் ஏதும் வருகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.