Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கோகிலா திருமணத்தில் ஒரு மிகப்பெரிய கலவரம் நடக்கப்போவது முன்பே நமக்கு தெரியும். தற்போது இதில் மாஸ் கொடுக்க இருக்கிறார் அன்புவின் அம்மா லலிதா.
ஒரு பக்கம் மகேஷ் ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் அன்புக்காக பெண் கேட்க காத்துக் கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் அன்பு யாருடைய அனுமதியும் இல்லாமல் ஆனந்தி கழுத்தில் தாலி கட்ட திட்டமிட்டு இருக்கிறான்.
நடக்க போகும் களேபரம்!
இந்த நிலைமையில் தான் ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் பெண் கேட்டுவிட்டு அவர்களுடைய முடிவை தெரிந்து கொண்டு துளசிக்கும், அன்புக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார் லலிதா.
மேலும் அன்பு அவனுடைய அப்பா புகைப்படத்திற்கு முன்னால் இருந்த தாலியை எடுத்துக் கொண்டு வந்தது தான் லலிதா மண்டபத்திற்கு வர காரணம். இன்னொரு பக்கம் ஆனந்தியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சுயம்புலிங்கம் திட்டமிட்டு இருக்கிறான்.
அது மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் ஆளை கோகிலா கழுத்தில் தாலி கட்ட தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறான்.
ஆனந்தியின் மிகப்பெரிய கனவான அவளுடைய அக்கா திருமணத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடைபெற இருக்கிறது. எது எப்படியோ ஒரே மேடையில் கோகிலா மற்றும் ஆனந்தியின் திருமணம் நடைபெறுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.